வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
பெட்ரோலிய, வெடிபொருட்கள், ஆக்சிஜன், தொழிலக வாயு நிறுவனங்கள் எதிர்கொண்டுள்ள பாதிப்புகளை சீர்செய்ய பல்வேறு நடவடிக்கைகளை பெட்ரோலியம் மற்றும் வெடிபொருட்கள் பாதுகாப்பு நிறுவனம் எடுத்துள்ளது
Posted On:
27 MAR 2020 11:27AM by PIB Chennai
மருத்துவமனைகள் மற்றும் இதர சுகாதார மையங்களுக்கு ஆக்சிஜன் தடையின்றி கிடைப்பதற்கும், கோவிட்-19ஐ கட்டுப்படுத்துவதற்காக நாடெங்கிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தினால் பெட்ரோலிய, வெடிபொருள்கள், பட்டாசுகள் மற்றும் தொழிற்சாலை வாயு நிறுவனங்கள் எதிர்கொண்டுள்ள பாதிப்புகளை களைவதற்குமான பல்வேறு நடவடிக்கைகளை, தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் (Department for Promotion of Industry and Internal Trade, - DPIIT) கீழ் செயல்படும் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள்கள் பாதுகாப்பு நிறுவனம் (PESO), எடுத்துள்ளது.
1. மருத்துவத்திற்குப் பயன்படும் ஆக்சிஜனை சேமித்து வைப்பதற்கும், அதை கொண்டு செல்வதற்குமான உரிமங்களை உடனே வழங்குமாறு பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள்கள் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தின் மூலம் அதன் கீழ் செயல்படும் அனைத்து அலுவலகங்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
2. நாட்டில் கொவிட்-19 பரவலை தடுப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் 24/3/2020 தேதியிட்ட உத்தரவு எண் 40-3/2020இன் படி, மருத்துவ ஆக்சிஜன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு ஆகியவற்றின் தடையில்லா தயாரிப்பையும், அதன் போக்குவரத்தையும் அனுமதிக்கும் படி, அனைத்து மாநிலங்களின் முதன்மைச் செயலாளர்களுக்கு (உள்துறை), பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள்கள் பாதுகாப்பு நிறுவனம் அறிவுரை வழங்கியுள்ளது.
3. மார்ச் மாதத்துடன் காலாவதியாக இருக்கும், ஆக்சிஜன் மற்றும் இதர வாயுக்களை எடுத்து செல்வதற்கான உரிமங்கள் 30/06/2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.
4. 31/03/2020ல் காலாவதியாக இருக்கும் வெடிபொருட்கள், பட்டாசுகள் ஆகியவற்றை சேமித்தல், எடுத்து செல்லுதல், பயன்படுத்துதல் மற்றும் தயாரிப்புக்கான உரிமங்கள் 30/09/2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. உரிமங்களைப் புதுப்பிப்பதற்கும் கட்டணம் எதுவும் வாங்கப்பட மாட்டாது.
5. கம்ப்ரெஸ்டு ஆக்சிஜன், சிஎன்ஜி, சமையல் எரிவாயு மற்றும் இதர வாயுக்களை சேமித்து வைப்பதற்குப் பயன்படுத்தப்படும் உருளைகளின் சட்டபூர்வ ஹைட்ரோ பரிசோதனை 31/03/2020க்குள் செய்யவேண்டி இருப்பின், அதை 30/06/2020 அன்று வரை செய்து கொள்ளலாம்.
6. ஆக்சிஜனை சேமித்து வைக்கவும், எடுத்து செல்லவும் பயன்படுத்தப்படும் அழுத்தமூட்டப்பட்ட களன்களின் அடைப்பான் (ரிலீஃப் வால்வு) சட்டபூர்வ பரிசோதனை மற்றும் ஹைட்ரோ பரிசோதனை 15/03/2020ல் இருந்து 30/06/2020க்குள் செய்யவேண்டி இருப்பின், அதை 30/06/2020 அன்று செய்து கொள்ளலாம்.
***
(Release ID: 1608521)
Visitor Counter : 203