உள்துறை அமைச்சகம்

துணை ராணுவப்படைகளில் என்சிசி சான்றிதழ் பெற்றவர்கள் சேருவதை ஊக்குவிக்கும் முக்கிய முடிவை மோடி அரசு எடுத்துள்ளது

Posted On: 19 MAR 2020 1:20PM by PIB Chennai

என்சிசி எனப்படும் தேசிய மாணவர் படையில். இந்திய இளைஞர்கள் சேருவதை அதிகரிக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்கை எட்டும் வகையில், மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா இதுவரை எடுக்கப்படாத மிக முக்கியமான முடிவை எடுத்துள்ளார். அதன்படி, என்சிசி சான்றிதழ் பெற்றவர்களுக்கு மத்திய ஆயுதக் காவல் படைகளில் சேருவதற்கான  நேரடி நுழைவுத் தேர்வுகளில் போனஸ் மதிப்பெண் வழங்கப்படும்.

என்சிசி ‘சி’ சான்றிதழ் பெற்றவர்களுக்கு, தேர்வுக்கான அதிகப்பட்ச மதிப்பெண்ணில் ஐந்து சதவீதமும், என்சிசி ‘பி’ சான்றிதழ்  பெற்றவர்களுக்கு மூன்று சதவீதமும், என்சிசி ‘ஏ’ சான்றிதழ் பெற்றவர்களுக்கு இரண்டு சதவீதமும் போனஸ் மதிப்பெண் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

என்சிசி ‘ஏ’ சான்றிதழ் பெற்றவர்களுக்கு, மத்திய ஆயுதக் காவல்படைக்கு  சார் ஆய்வாளர், கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான நேரடி ஆட்சேர்ப்பு தேர்வுகளுக்கு இந்த போனஸ் மதிப்பெண் வழங்கும் முடிவு  பொருந்தும்.

காவல்படை பணியிடங்களுக்கான நேரடி நுழைவுத் தேர்வில். என்சிசி சான்றிதழ் பெற்றவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

                                *****



(Release ID: 1607132) Visitor Counter : 124