தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
இந்தியா / பாரத் 2020-ஐ மத்திய அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார்
Posted On:
19 FEB 2020 3:56PM by PIB Chennai
இந்தியா / பாரத் 2020-ஐ மத்திய அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் இன்று வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், “போட்டித் தேர்வுகளில் பங்கேற்போர் உட்பட அனைத்து மக்களுக்கும் முழுமையான பார்வைக் கையேடாக இந்தப் புத்தகம் உள்ளது” என்றார். இதனை வெளியிட்ட வெளியீட்டுப் பிரிவை அமைச்சர் பாராட்டினார். இந்தப் புத்தகம் ஒரு மரபாக மாறும் என்றும் நாளுக்குநாள் இது பிரபலமடையும் என்றும் அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் இதன் இணையப் பதிப்பையும் திரு ஜவடேகர் வெளியிட்டார். டேப்லெட்ஸ், கணினிகள், இ-ரீடர்கள், ஸ்மார்ட் போன்கள் போன்ற பல வகையான சாதனங்களிலும் இணையப் பதிப்பைப் பெற முடியும். இ-புத்தகம் தொழில்நுட்ப ரீதியாக சிறந்த சர்வதேச தரத்தில் உள்ளது. இதேபோன்ற தன்மை அச்சுப்பதிப்பிலும் உள்ளது.
அச்சிடப்பட்ட நூலின் விலை 300-க்கும், இ-புத்தகம் 225-க்கும் கிடைக்கும். https://www.publicationsdivision.nic.in/index.php?route=product/pbook என்ற வெளியீட்டுப் பிரிவின் இணையத்தின்வழி 2020 பிப்ரவரி 20-ல் இருந்து இந்தப் புத்தகங்களை வாங்கலாம்.
அமேசான், கூகுள் ப்ளே ஸ்டோர் ஆகியவற்றின் மூலமும் இந்தப் புத்தகங்களைப் பெறலாம்.
••••••••••
(Release ID: 1603659)
Visitor Counter : 199