நிதி அமைச்சகம்

ஃபரிதாபாத்தில் உள்ள தேசிய நிதி மேலாண்மை நிறுவனம், அருண்ஜேட்லி தேசிய நிதி மேலாண்மை நிறுவனம் என பெயர் மாற்றப்படுகிறது

Posted On: 11 FEB 2020 9:02AM by PIB Chennai

ஃபரிதாபாத்தில் உள்ள தேசிய நிதி மேலாண்மை நிறுவனத்தின் பெயரை, அருண்ஜேட்லி தேசிய நிதி மேலாண்மை நிறுவனம் என பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

1993 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த நிறுவனம், மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத்துறையின் கீழ், பதிவு செய்யப்பட்டது.  மத்திய பணியாளர் தேர்வாணையத்தால்  பணியமர்த்தப்பட்ட நிதி மற்றும் கணக்கியல் துறையைச் சேர்ந்த  பல்வேறு அதிகாரிகளுக்கு இதில் பயிற்சி அளிக்கப்படும்.  மத்திய நிதியமைச்சர் இதன் தலைவராவார்.  

முன்னாள் நிதியமைச்சர் மறைந்த அருண்ஜேட்லி, 26 மே 2014 முதல் 30 மே 2019 வரை மத்திய நிதி மற்றும் பெரு நிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சராக இருந்தபோது, சரக்கு மற்றும் சேவை வரி பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட் இணைப்பு, திவால் சட்ட அறிமுகம் ஆகிய பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டார். 

அவரது தொலைநோக்கு மற்றும் பங்களிப்பைப் போற்றும் வகையில், தேசிய நிதி மேலாண்மை நிறுவனத்திற்கு அவரது பெயரைச் சூட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

****



(Release ID: 1602793) Visitor Counter : 150