சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
சமூக நீதி, அதிகாரமயமாக்கல் மற்றும் உடல் குறைபாடுடையவர்களுக்கான அதிகாரமயமாக்கல் துறை அமைச்சகத்தின் ஆண்டிறுதி மறு ஆய்வு
திருநங்கைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை பாதுகாப்பதற்கான திருநங்கைகள் சட்டம் 2019 இயற்றல்
Posted On:
26 DEC 2019 11:48AM by PIB Chennai
சமூகம், கல்வி மற்றும் பொருளாதார ரீதியின் விளிம்பில் உள்ளவர்களுக்கு குறிப்பாக (i) ஆதி திராவிடர்கள், (ii) இதர பிற்பட்ட வகுப்பினர், (iii) மூத்த குடிமக்கள், (iv) மதுவுக்கும், போதை மருந்துக்கும் அடிமையானவர்கள், (v) திருநங்கைகள், (vi) பிச்சைக்காரர்கள், (vii) குறிக்கப்பட்ட மற்றும் நாடோடி பழங்குடியினர் (டிஎன்டி) (viii) பொருளாதார ரீதியில் பின்தங்கிய வகுப்பினர் (ஈபிசி) மற்றும் (ix) பொருளாதார ரீதியில் நலிந்த பிரிவினர் (ஈடபிள்யூஎஸ்) ஆகியோரை அதிகாரமயமாக்குதலே சமூகநீதி மற்றும் அதிகாரமயமாக்கல் துறையின் நோக்கமாகும்.
1 திருநங்கைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை பாதுகாப்பதற்கான திருநங்கைகள் சட்டம் 2019
திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) மசோதா 2019 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலை, டிசம்பர் 5, 2019 அன்று பெற்றது. இந்த மசோதா மாநிலங்களவையில் 26 நவம்பர், 2019 அன்று நிறைவேற்றப்பட்டது. 17-ஆவது மக்களவையில் ஏற்கனவே ஆகஸ்ட் 5, 2019 அன்று இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு விட்டது. இந்தச் சட்டம் பெருமளவிலான திருநங்கைகளுக்குப் பயனளிப்பதுடன், அவர்கள் மீதான தவறான கருத்துக்களைப் போக்கவும் உதவும். சமுதாயத்தில் மிகவும் பயனுள்ளவர்கள் என்பதை உணர வைக்க உதவும்.
2 மூத்த குடிமக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு வயோசிரேஷ்தா சம்மான்
குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த், சர்வதேச மூத்த குடிமக்கள் தினத்தை முன்னிட்டு அக்டோபர் 3, 2019 அன்று புதுதில்லியில் நடந்த நிகழ்ச்சியில் மூத்த குடிமக்களில் பிரபலமானவர்களுக்கும் மற்றும் முதியோர்களை பராமரிக்கும் நிறுவனங்களுக்கும் அவர்கள் மூத்த குடிமக்களுக்கு ஆற்றிவரும் சேவையைப் பாராட்டி, வயோரேஷ்தா சம்மான் விருதுகளை வழங்கினார்.
3 இந்தியாவில் போதை மருந்து குறித்த தேசிய கணக்கெடுப்பு
சமூகநீதி மற்றும் அதிகாரமயமாக்கல் துறை இந்தியாவில் போதை மருந்து எந்த அளவுக்கு பரவியிருக்கிறது என்பதைக் கண்டறிந்து கணக்கெடுப்பதற்கான பொறுப்பை புதுதில்லி எயிம்ஸ் மருத்துவமனையின் (என்டிடிடிசி) தேசிய மருந்துசார்பு சிகிச்சை மையத்திற்கு வழங்கியது.
4 டிஏஐசி மற்றும் டிஐசிசிஐ ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து, ஆதி திராவிடர்கள் மற்றும் பழங்குடியின சமூகத்தினரை தலித் தொழில்முனைதல் ஆராய்ச்சியின் வழியாக அதிகாரமயமாக்குதல்
டாக்டர் அம்பேத்கார் சர்வதேச மையம் (டிஏஐசி) சமூக நீதி, அதிகாரமயமாக்கல் அமைச்சகம் மற்றும் தலித் இந்திய வர்த்தக தொழில் சபை ஆகியவற்றுக்கு இடையே புதுதில்லியில் ஜுன் 29, 2019 அன்று, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமயமாக்கல் துறை அமைச்சர் திரு தாவர்சந்த் கெலாட் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
5 ஆதி திராவிடர்கள் மற்றும் பழங்குடியினரை அதிகாரமயமாக்குதல்
- டாக்டர் பி ஆர் அம்பேத்கரின் லட்சியங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து கல்வியைத் தொடரவும், ஆய்வு செய்யவும் டாக்டர் அம்பேத்கர் இருக்கைத் திட்டம்
- சாதிகளுக்கு இடையே திருமணத்தை ஊக்குவிப்பதற்கு டாக்டர் அம்பேத்கரின் சமூக ஒருங்கிணைப்புத் திட்டம்
- டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளையின் தேசிய கட்டுரைப் போட்டித் திட்டம்
6 போதை மருந்து பழக்கத்திற்கு எதிரான 17-ஆவது ஓட்டம்
போதை மருந்து எதிர்ப்பு மற்றும் கள்ளச்சாராயம் கடத்துதலுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு, புதுதில்லியில் ஜுன் 26, 2019 அன்று நடைபெற்ற 17-ஆவது ஓட்டத்தில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமயமாக்கல் துறை அமைச்சர் திரு தாவர்சந்த் கெலாட் பங்கேற்றார்.
உடல் குறைபாடு உடையவர்களுக்கான அதிகாரமயமாக்கல் துறை (டிஈபிடபிள்யூடி)
உடல் குறைபாடு உடையவர்களின் நல்வாழ்வு மற்றும் அதிகாரமயமாக்கலுக்கான செயல்பாடுகளை நோக்கமாகக் கொண்டு உடல் குறைபாடு உடையவர்களுக்கான அதிகாரமயமாக்கல் துறை உருவாக்கப்பட்டது.
உடல் குறைபாடு உடையவர்களின் மேம்பாடு வளர்ச்சி மற்றும் சமுதாயத்தில் பாதுகாப்பான, கௌரவமான வாழ்வியலை மேற்கொள்வதை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும்.
உடல் குறைபாடு உடையவர்களுக்கான அதிகாரமயமாக்கல் துறையின் சாதனைகள்
1 மத்தியப்பிரதேச மாநிலம் செகோரில் மனநல சீரமைப்பு தேசிய நிறுவனத்தை ஏற்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த நிறுவனம் ஒரு சமூக அமைப்பாக மத்தியப் பிரதேச சங்க பதிவுச்சட்டம் 1973-ன்கீழ், மே 28, 2019 அன்று பதிவு செய்யப்பட்டது. மத்தியப் பிரதேச அரசு வழங்கிய தற்காலிகமான இடத்தில் இந்த அமைப்பு 30.09.2019 முதல் செயல்படத் தொடங்கியது.
2 உடல் குறைபாடு மற்றும் உடல் குறைபாடுடையவர்களின் உரிமைகள் குறித்த ஐநா தீர்மானங்களை அமல்படுத்துதல் தகுதி பற்றிய இந்தியாவின் முதல் அறிக்கை 2015, நவம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபை இதே ஆண்டு செப்டம்பர் 3-ஆம் தேதி வெற்றிகரமாக ஏற்றுக்கொண்டது
3 மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உடல் குறைபாடு உடையவர்களுக்கான விளையாட்டு மையம் ஒன்றை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
4 “திவ்ய கலா சக்தி என்ற கலாச்சார நிகழ்வு: உடல் குறைபாடானாலும், திறமையை காட்சிப்படுத்துதல்” 2019, ஜூலை 23 ஆம் தேதி அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர், மக்களவை சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
5 அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் அமைந்துள்ள பல்வேறு உடல் குறைபாடு உடையவர்களை (என்ஐஈபிஎம்டி) அதிகாரமயமாக்கும் தேசிய நிறுவனத்தின் விரிவாக்க மையம் கூட்டு மண்டல மையமாக ஜூன் 19, 2019 அன்று மேம்படுத்தப்பட்டது.
6 உடல் குறைபாடு உடையவர்களுக்கான அதிகாரமயமாக்கல் துறை, மேலாண்மை தகவல் அமைப்பை (எம்ஐஎஸ்) முகநூலை மேம்படுத்தியது. இதனை மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமயமாக்கல் துறை அமைச்சர் திரு தாவர்சந்த் கெலாட் 18.09.2019 அன்று தொடங்கிவைத்தார்.
9 உடல் குறைபாடு உடையவர்களின் சர்வதேச தினமான டிசம்பர் 3, 2019 அன்று குடியரசுத் துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு, உடல் குறைபாடு உடையவர்களுக்கு அதிகாரமயமாக்கலில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு தேசிய விருது வழங்கி கௌரவித்தார். மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமயமாக்கல் துறை அமைச்சர் திரு தாவர்சந்த் கெலாட் விழாவிற்கு தலைமை வகித்தார். சமூக நீதி மற்றும் அதிகாரமயமாக்கல் துறை இணையமைச்சர்கள் திரு கிரிஷன் பால் குர்ஜார், திரு ராம்தாஸ் அத்வாலே மற்றும் திரு ரத்தன்லால் கட்டாரியா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர்.
********
(Release ID: 1597809)
Visitor Counter : 882