குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

ஆண்டிறுதி மறுஆய்வு-2019: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம்


65,312 புதிய குறுந்தொழில்கள் மற்றும் 5,22,496 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன

Posted On: 24 DEC 2019 12:06PM by PIB Chennai

2024 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்குடன் இந்தியப் பொருளாதாரம் உலகிலேயே முன்னணி பொருளாதார நாடுகளில் ஒன்றாக உருவாக உள்ளது. நமது தொலைநோக்குப் பார்வை என்னவென்றால், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவில்  குறைந்தபட்சம் 2 டிரில்லியன் டாலர் பங்களிப்பு வருவதை உறுதி செய்வதாகும்.

 

வேலைவாய்ப்பை உருவாக்கும் பிரதமரின் திட்டம் (PMEGP):

வேலைவாய்ப்பை உருவாக்கும் பிரதமரின் திட்டத்தின் கீழ் (PMEGP) 65,312 புதிய குறுந் தொழில்கள் ஏற்படுத்தப்பட்டன. 5,22,496 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. ரூ.1929.83 கோடி மதிப்பிலான விளிம்பில் உள்ள பணமானியம் பயன்படுத்தப்பட்டது.

 

தொகுப்பு மேம்பாட்டுத் திட்டம்:

குறு, சிறு தொழில்கள் – தொகுப்பு மேம்பாட்டுத் திட்டம்  (MSE-CDP):

  1. 17 பொது வசதி மையங்கள் மற்றும் 14 உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் தொடங்கப்பட்டன.
  2. 24 பொது வசதி மையங்கள் மற்றும் 25 உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டன

சூரிய சக்தி சர்க்கா தொகுப்புகள்:

குடியரசுத் தலைவர் திரு.ராம் நாத் கோவிந்த், சூரிய சக்தி சர்கா இயக்கத்தை புதுதில்லியில் நிகழ்ந்த விழாவில் 27.06.2018 அன்று தொடங்கி வைத்தார்

 

கடன் தொடர்பான முதலீட்டு மானியம் மறு அறிமுகம்:

கடன் தொடர்பான முதலீட்டு மானியத்தை உள்ளடக்கிய கூறுக்கு கடன் தொடர்பான முதலீட்டு மானியம் – தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தொடர்ந்திட அரசு அனுமதி அளித்தது.

 

தொழில்நுட்ப மைய அமைப்புகள் திட்டம் (TCSP):

200 மில்லியன் அமெரிக்க டாலர் உலக வங்கி கடன் உதவியுடன் ரூ.2,200 கோடி மதிப்பீட்டில் குறு,சிறு, நடுத்தர தொழில்கள் அமைச்சகம் தொழில்நுட்ப மைய அமைப்புத் திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.

 

டிஜிட்டல் குறு, சிறு, நடுத்தர தொழில்கள்

பொது சேவை மையங்கள் (CSC), இந்திய தொழில் முனைப்பு மேம்பாட்டு நிறுவனம் உள்ளிட்ட அமைப்புகள் (EDII), குறு, சிறு, நடுத்தர தொழில்களை முன்னிலைப்படுத்துவதற்காக அவற்றை டிஜிட்டல் மேடைக்கு கொண்டு வந்தன. குறு, சிறு, நடுத்தர தொழில்களின் பங்குதாரர்களுக்கு நாடு முழுவதும் விழிப்புணர்வு முகாம்களும், பயிலரங்குகளும் நடத்தப்பட்டன. இதன் மூலம் அனைத்து குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கான சேவை அமைப்புகள் ஒரே மேடையின் கீழ் கொண்டு வரப்பட்டன.

 

பராமரிப்பு:

200-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழில் துறை சங்கங்கள், சமூக நிறுவனங்கள் ஆகியவற்றுக்கான பராமரிப்பு மையங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

 

வடிவமைப்பு சோதனைக்கூடம்:

மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் (MHRD) கீழ் வரும் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழில்கூட சங்கங்கள், சமூக நிறுவனங்கள், சுயசேவைக் குழுக்கள் ஆகியவை குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கு வடிவமைப்பு உதவி வழங்கும் வகையில் சோதனைக் கூடங்கள் திறக்கப்பட்டன.

 

தவறு இழைக்காத சான்றிதழ் திட்டத்தின் கீழ் வரும் குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கு நிதியுதவி: 

தவறு இழைக்காத சான்றிதழ் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 23070 குறு, சிறு, நடுத்தர தொழில்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றுக்கான அளவுகோல்கள் எளிமைப்படுத்தப்பட்டன.

 

அறிவுசார் சொத்துரிமை (IPR) திட்டம் குறித்த விழிப்புணர்வு: 

குறு, சிறு, நடுத்தர தொழில்களை பதிவு செய்யவும், வர்த்தக குறியீடு மற்றும் வணிக உரிமையை பெறவும் அறிவுசார் சொத்துரிமை வழக்கறிஞரை ஏற்படுத்திக் கொள்ள 60-க்கும் மேற்பட்ட அறிவுசார் சொத்துரிமை வசதி மையங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

 

கொள்முதல் மற்றும் சந்தைக்கான ஆதரவு: 

நாடு முழுவதும் மாவட்ட உதயம் சமாகம்ஸ் திட்டமிடப்பட்டு 731 மாவட்டங்களில் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 

தொழில் முனைதல் திறன் மேம்பாட்டுத் திட்டம் (ESDP): 

நாடு முழுவதும் பல்வேறு திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகளுக்காக தொழில் முனைதல் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.135 கோடிக்கும் அதிகமாக அனுமதி வழங்கப்பட்டது.

 

யு.கே.சின்ஹா குழு பரிந்துரைகள்: 

திரு.யு.கே.சின்ஹா தலைமையின் கீழ் இந்திய ரிசர்வ் வங்கியின் நிபுணர் குழு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு 37 பரிந்துரைகளை செய்திருந்தது. சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் / துறைகள் / அமைப்புகள் / மாநிலங்கள் இந்த தொழில்களுக்குப் பொருத்தமான தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டன.

சிறு நடுத்தர தொழில்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு: 

2-வது சர்வதேச சிறு, நடுத்தர தொழில்களுக்கான மாநாடு மற்றும் இந்திய சிறு, நடுத்தர தொழில்களின் அமைப்பு ஜூன் 27-29 தேதிகளில்  வெளியுறவு அமைச்சகத்தின் பொருளாதார தூதரக உறவு மற்றும் மாநிலங்களின் பிரிவு ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தியாவிலிருந்து 1385 மற்றும் 44 நாடுகளிலிருந்து 175 தொழிலதிபர்கள் இதில் பங்கேற்றனர்.

 

கதர் துணியைப் பிரபலப்படுத்துதல் மற்றும் கிராமத் தொழில்களுக்கு அதிகாரங்களை பரவலாக்குதல்:

 

  • கதருக்கு தனியான பிரத்யேக எச்எஸ் குறியீடு, ஏற்றுமதிக்கு ஊக்குவிப்பு

மத்திய அரசின் பிரத்யேக எச்எஸ் குறியீட்டை 4.11.19 அன்று கதர் பெற்றுள்ளது. ஏற்றுமதிக்கான துணிகளை வகைப்படுத்துவதற்கு இது உதவும்.

  • கதர் மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் ஜிஏஐஎல் மற்றும் பிஎப்சி ஆகியவற்றிடமிருந்து ரூ.6 கோடிக்கும் அதிகமான புதிய ஆணையைப் பெற்றுள்ளது
  • கதர் மற்றும் கிராமத் தொழில் ஆணையம், இந்திய இயற்கை வாயு ஆணையத்திடமிருந்து (ஜிஏஐஎல்) ரூ.5.88 கோடி மதிப்பிலான ஆணையையும் மற்றும் மின்சார நிதியுதவி (பிஎப்சி) நிறுவனத்திடமிருந்து ரூ.75 லட்சம் மதிப்பிலான ஆணையையும் பெற்றுள்ளது.
  • கோவாவில் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் புதிய முயற்சிகள்
  • கோவாவில் 160 குடும்பங்களுக்கு மின்சார பாட்டர் சக்கரங்களும், பயிற்சி பெற்ற 50 பெண்களுக்கு புதிதாக வடிவமைக்கப்பட்ட நூற் நூட்பு சக்கரங்களும், கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியத்தால் அண்மையில் வழங்கப்பட்டன.
  • ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கதர் துண்டு விற்பனைத் திட்டம்
  • குறு, சிறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் திரு.நிதின் கட்கரி ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கதர் துண்டு விற்பனை செய்யும் திட்டத்தை இம்மாதம் 17-ந் தேதி தொடங்கி வைத்தார். கதர் துண்டு விற்பனை, ஜம்மு-காஷ்மீரில் உள்ள பெண்கள் சுதந்திரமாகவும், மரியாதையாகவும் வாழ்வதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

 

********



(Release ID: 1597355) Visitor Counter : 166