வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

தொழில் செய்வதற்கு உகந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 63 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது


புதுமைகளை புகுத்தும் நாடுகளின் பட்டியலிலும் இந்தியா 52 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது

தேசிய வணிகர் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது

Posted On: 16 DEC 2019 6:30PM by PIB Chennai

உலக வங்கியின் தொழில் தொடங்குவதற்கு உகந்த நாடுகள் பற்றிய ஆய்வறிக்கை 2020-ல் இந்தியா முன்னேற்றம்.

  • உலகில் உள்ள 190 நாடுகளில் 2019-ல் 77 ஆவது இடத்தில் இருந்த இந்தியா 13 இடங்கள் முன்னேறி, தற்போது 63 ஆவது இடத்திற்கு வந்துள்ளது. 
  • சர்வதேச அளவில் சிறந்த நடைமுறைகளை எட்டியுள்ள இந்தியா முன்னேற்றத்திற்கான 10 புள்ளிகளில் 7 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
  • முன்னேற்றத்தை அடைந்த நாடுகளில் தொடர்ந்து 3-ஆவது முறையாக முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளது.

புதிய உச்சத்தை எட்டிய ஸ்டார்ட் அப் இந்தியா- புதுமைகளை புகுத்தும் நாடுகளின் பட்டியலிலும் இந்தியா முன்னேற்றம்

  • ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின்கீழ், இதுவரை 21,778 நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.  2019 ஜூன் 1-லிருந்து மட்டும் 2,912 நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. 
  • வருமான வரிச் சட்டப் பிரிவு 54 ஜிபி திருத்தப்பட்ட பிறகு, குறைந்தபட்சம் 50% பங்கு மூலதனம் வைத்திருக்க வேண்டும் அல்லது  வாக்குரிமை வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை 25% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
  • புதுமைகளுக்கான சர்வதேச பட்டியலில் கடந்த 2015-ல் 81 ஆவது இடத்திலிருந்த இந்தியா, 2019-ல் 52 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

ஏற்றுமதியை ஊக்குவிக்க வர்த்தகத் துறை மேற்கொண்ட முன்முயற்சிகள்:

  • நிர்விக் (NIRVIK) என்ற பெயரில் புதிய ஏற்றுமதிக் கடன் காப்பீட்டுத் திட்டம் ஒன்றை, ஏற்றுமதி கடன் உத்தரவாதக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • ஏற்றுமதியாளர்களின் அசல் மற்றும் வட்டித் தொகைக்கு வங்கிகளால் அளிக்கப்பட்டு வந்த காப்பீட்டு வரம்பு 60%-லிருந்து 90%-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • ரூ.80 கோடிக்கு குறைவான கணக்குகளுக்கான பிரீமியம் தொகை ஆண்டுக்கு 0.60 ஆகவும், ரூ.80 கோடிக்கும் மேல் உள்ள கணக்குகளுக்கு 0.72 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
  • நிலுவைத் தொகைகளை வெளிப்படையான முறையில் ஆன்லைன் வாயிலாக பெறுவதற்கான புள்ளி விவரங்களை ஏற்றுமதிக் கடன் உத்தரவாதக் கழகம் தயாரித்துள்ளது. 

ஏற்றுமதிக்கு ஆதரவு

  • ஏற்றுமதிக் கடன் உத்தரவாதக் கழகத்தில் முதலீட்டுத் தொகையாக ரூ.389 கோடி செலுத்தப்பட்டுள்ளது. 
  • ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் சந்தைகளில் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ள இந்த முதலீட்டுத் தொகை உறுதுணையாக இருக்கும்.

தேசிய போக்குவரத்துக் கொள்கை – 2019

  • போக்குவரத்துக் கட்டண செலவுகளை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வீதத்தில் 14%-லிருந்து 9% ஆக குறைக்கும் நோக்குடன் தேசிய போக்குவரத்துக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. 
  • இந்தியாவை சர்வதேச போக்குவரத்து மையமாக மாற்றுவதுடன், தொழில் போட்டித் தன்மையை ஊக்குவித்து பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. 
  • பல்வகை சரக்குப் போக்குவரத்து மசோதா 2019 இறுதி செய்யப்பட்டு ஒப்புதலுக்கு தயாராக உள்ளது.  ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் உள்நாட்டு வர்த்தகத்திற்கு உதவும் நோக்கில் இந்த மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. 

வேளாண் ஏற்றுமதிக் கொள்கை

  • வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் நோக்கில் இந்த கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
  • இதற்காக 2019-20 ஆம் ஆண்டு ரூ.206 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 
  • இத்திட்டத்தில் இதுவரை 740 வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள் பதிவு செய்துள்ளன. 

பிற்படுத்தப்பட்ட பகுதி முன்னேற்றத்திற்கான திட்டங்கள்

  • ஜம்மு காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம், உத்ராகண்ட் மற்றும் சிக்கிம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கு, ஜி எஸ் டி நடைமுறையின்கீழ் பட்ஜெட் ஆதாரமாக ரூ.1,700 கோடி வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
  • தகுதிவாய்ந்த தொழில் நிறுவனங்களுக்கு 2019 நவம்பர் 15 வரை மத்திய மறைமுக வரிகள் & சுங்க வாரியத்தால் ரூ.1,692 கோடி ஏற்கனவே பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. 

அந்நிய நேரடி முதலீடு ஊக்குவிப்பு

  • நிலக்கரி சுரங்கப் பணிகளில் தானியங்கி வழியில் 100% அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுகிறது. 
  • ஒப்பந்த உற்பத்தித் துறையிலும் 100% அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுகிறது. 

அரசு கொள்முதலில் இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டம் ஊக்குவிப்பு

  • ரூ.50 லட்சம் வரையிலான பொருட்களை உள்நாட்டு விநியோகிஸ்தர்களே வழங்க ஏதுவாக சட்டதிருத்தம் செய்யப்பட்டுள்ளது. 
  • இருசக்கர சைக்கிள் தொழில்துறையினருக்கு உதவும் வகையில், இருசக்கர சைக்கிள் வளர்ச்சிக் கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது.
  • புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 4 தேசிய வடிவமைப்பு நிறுவனங்களுக்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவன அந்தஸ்து வழங்கும் வகையில், சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
  • வணிகர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, தேசிய வணிகர் நல வாரியம் 2019 ஜூலை 26 அன்று அமைக்கப்பட்டுள்ளது.

**********


(Release ID: 1596748) Visitor Counter : 285


Read this release in: English , Hindi , Marathi , Kannada