குடியரசுத் தலைவர் செயலகம்
குடியரசுத் தலைவர் மாளிகையில் டிசம்பர் 14-ஆம் தேதி துணை வேந்தர்கள் / மத்திய பல்கலைக்கழக இயக்குனர்கள் / உயர்கல்வி நிறுவன இயக்குனர்கள் மாநாடு
प्रविष्टि तिथि:
12 DEC 2019 12:29PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் மாளிகையில் 46 துணை வேந்தர்கள் / மத்திய பல்கலைக்கழக இயக்குனர்கள் / உயர்கல்வி நிறுவன இயக்குனர்கள் பங்கேற்கும் மாநாடு டிசம்பர் 14-ஆம் தேதி நடைபெறுகிறது. குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த், மத்தியப் பல்கலைக் கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் பணிமுறைக் கண்காணிப்பு வருகையாளர் என்ற முறையில் அவற்றின் தலைவர்களுடன் நடத்தும் வழக்கமான கலந்துரையாடலின் ஒரு பகுதியாக இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டின்போது பல்வேறு துணைக்குழுக்கள், பல்வேறு தலைப்புகளில் அறிக்கை அளிப்பார்கள். ஆராய்ச்சி மேம்பாடு, புதுமை படைப்பு மற்றும் மாணவர்களிடையே தொழில் முனைவுத்திறன் மேம்பாடு, தொழில்துறை – கல்வி நிறுவனங்கள் இணைப்புகளை உருவாக்குதல், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் இருந்து வரவழைக்கும் ஆசிரியர்கள் நியமனம் உள்ளிட்ட காலியிடங்களை நிரப்புதல், பழைய மாணவர்கள் நிதியத்தை உருவாக்குதல் மற்றும் பழைய மாணவர்கள் செயல்பாடுகளை அதிகரித்தல், பெரிய அடிப்படை கட்டுமானத் திட்டங்களைக் காலக்கெடுவுடன் நிறைவு செய்தல் போன்றவை குறித்த அறிக்கைகளை துணைக்குழுவினர் மாநாட்டில் அளிப்பார்கள்.
மத்திய ரசாயனப்பொருட்கள் மற்றும் உரத்துறை, விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை, மனிதவளமேம்பாட்டுத்துறை, வர்த்தகம் மற்றும் தொழில்துறை, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை ஆகியவற்றின் அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி குழுமத் தலைவர் ஆகியோரும் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
******
(रिलीज़ आईडी: 1596171)
आगंतुक पटल : 142