நிதி ஆணையம்

15-வது நிதிக்குழு தனது 2020-21 ஆம் ஆண்டுக்கான அறிக்கையை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்தது

Posted On: 05 DEC 2019 1:47PM by PIB Chennai

15-வது நிதிக்குழுவின் தலைவர் திரு. என்.கே.சிங், உறுப்பினர்கள் திரு.அஜய் நாராயண் ஜா, திரு.அசோக் லாஹிரி, திரு. ரமேஷ் சந்த், திரு. அனூப் சிங், செயலாளர் திரு. அரவிந்த் மேத்தா ஆகியோர் இன்று(05.12.2019) குடியரசுத் தலைவர் திரு.ராம் நாத் கோவிந்தைச் சந்தித்து, 2020-21 ஆம் ஆண்டுக்கான ஆணையத்தின் அறிக்கையை மேல் நடவடிக்கைக்காக சமர்ப்பித்தனர்.  இந்த அறிக்கையில் செய்யப்பட்டுள்ள பரிந்துரைகள் குறித்து நிதி ஆணையக் குழுவினர் குடியரசுத் தலைவரிடம் எடுத்துரைத்தனர்.

     15-ஆவது நிதிக்குழு 2017 நவம்பர் 27 ஆம் தேதியன்று அரசியல் சட்டத்தின் 280-வது பிரிவின் கீழ், குடியரசுத் தலைவரால் அமைக்கப்பட்டது.  2020 ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல், 2025 மார்ச் 31 ஆம் தேதி வரையிலான 5 ஆண்டு காலத்திற்குத் தேவையான பரிந்துரைகளைச் செய்வதற்காக குழு அமைக்கப்பட்டது.  இதற்கென குடியரசுத் தலைவர் வெளியிட்ட அறிவிக்கையில், ஆணையத்தின் பணிகள் குறித்த விரிவான குறிப்பு இடம்பெற்றுள்ளது.

     பின்னர், 2019 நவம்பர் 27 தேதியிட்ட அரசிதழ் அறிவிக்கையில், 15-வது நிதிக்குழு 2020-21 ஆம் ஆண்டுக்கான அறிக்கையை 2019 நவம்பர் 30 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.  இதனைத் தொடர்ந்து, 2021 ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல், 2026 மார்ச் 31 ஆம் தேதி வரையிலான 5 ஆண்டு காலத்திற்கு உரிய அறிக்கையை, 2020 அக்டோபர் 30 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

 *****

 

 

(Release ID: 1595047)
 



(Release ID: 1595091) Visitor Counter : 418