பிரதமர் அலுவலகம்

ரியாத்தில் ஜோர்டான் மன்னருடன் பிரதமர் சந்திப்பு

Posted On: 29 OCT 2019 10:16PM by PIB Chennai

சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெற்ற எதிர்கால முதலீட்டு முன்முயற்சிக்கான அமைப்பு கூட்டத்திற்கிடையே பிரதமர் திரு.நரேந்திர மோடி, ஜோர்டான் மன்னர் மேன்மை தங்கிய இரண்டாம் அப்துல்லா பின் அல் – உசேனை சந்தித்துப் பேசினார். ஜோர்டான் மன்னர் பிப்ரவரி 27-ந் தேதி முதல் மார்ச் 1-ந் தேதி முடிய இந்தியாவுக்கு வருகை தந்தபோது கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ஒப்பந்தங்கள் உட்பட இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்த மேற்கொள்ள வேண்டிய  நடைமுறைகள் மற்றும் இதர பிராந்திய நிகழ்வுகள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.

இந்தியாவுக்கும், ஜோர்டானுக்கும் இடையே பழங்காலத்தில் இருந்து வரலாற்று ரீதியிலான இணைப்புகள், கலாச்சார உறவுகள் மக்களுக்கு இடையிலான தொடர்புகள் ஆகியவை இருந்து வருகின்றன. பிரதமரின் ஜோர்டான் பயணம், 2018-ல் மன்னர் மேற்கொண்ட இந்தியப் பயணம் ஆகியவை நமது இருதரப்பு உறவுகளில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தி உள்ளன. அவை பரஸ்பர மரியாதையையும், பல்வேறு இருதரப்பு, பிராந்திய, பலதரப்பட்ட விசயங்களில் புரிந்துணர்வையும் கொண்டுள்ளன.

 

***


(Release ID: 1589582) Visitor Counter : 106