பிரதமர் அலுவலகம்
தீபாவளி வாழ்த்து தெரிவித்த உலக நாடுகளின் தலைவர்களுக்கு பிரதமர் நன்றி
இடுகை இடப்பட்ட நாள்:
28 OCT 2019 8:32PM by PIB Chennai
இங்கிலாந்து பிரதமர் திரு.போரிஸ் ஜான்சன், இஸ்ரேல் பிரதமர் திரு.பெஞ்சமின் நெதன்யாஹு, அமெரிக்க அதிபர் திரு.டொனால்டு டிரம்ப், கனடா பிரதமர் திரு.ஜஸ்டின் ட்ரூடோ, இஸ்ரேல் அதிபர் திரு.ரூவன் ரிவ்லின், சிங்கப்பூர் பிரதமர் திரு.லீ சீன் லூங், அமெரிக்க துணை அதிபர் திரு.மைக் பென்ஸ் உட்பட, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்த உலக நாடுகளின் தலைவர்களுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.


நரேந்திர மோடி
✔@narendramodi
பிரதமர் போரிஸ் ஜான்சன் தீபாவளியின் சாராம்சத்தை மிகச் சிறப்பாக எடுத்துரைத்துள்ளார். தீபாவளி நம் அனைவரையும் ஒருங்கிணைப்பதை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். பிரிட்டன்வாழ் இந்திய சமுதாயத்தினரின் பங்களிப்பை சிறப்பாக எடுத்துக் கூறியதற்காக அவருக்கு நன்றி செலுத்துகிறேன். @BorisJohnson
இந்த பண்டிகை காலத்தில் சமோசாக்கள் மற்றும் இனிப்புகளை அவரும் ருசித்திருப்பார் என நம்புகிறேன். https://twitter.com/BorisJohnson/status/1188190221302714369 …

நரேந்திர மோடி
✔@narendramodi
எனதருமை நண்பர் பிபி, உங்களது தீபாவளி வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்களுக்கும் வாழ்த்துகள்.


நரேந்திர மோடி
✔@narendramodi
எப்போதும் போல அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பும் தீபாவளிப் பண்டிகையை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடியுள்ளார். அவருக்கு வாழ்த்துகள்.
தரணியெங்கும் ஒளிமயமாக திகழட்டும்.


Narendra Modi
✔@narendramodi
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் வாழ்த்துகள் கருத்தாழமிக்கவை.
தீபாவளி மற்றும் பந்தி சோர் திவாஸ் போன்ற பண்டிகைகள், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும் வழங்கட்டும்.


Narendra Modi
✔@narendramodi
அதிபர் ரூவியின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. இந்த பண்டிகை காலம் நல்லிணக்கத்தையும், மகிழ்ச்சியையும் அதிகரிக்கச் செய்யட்டும்.


Narendra Modi
✔@narendramodi
பிரதமர் லீ சீன் லூங் அவர்களே, மிகுந்த நலமுடன் இருக்கிறேன்
சிங்கப்பூர்வாழ் பெருமைமிகு மக்கள் இந்தப் பண்டிகையை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி இருப்பார்கள் என நான் நம்புகிறேன்.


Narendra Modi
✔@narendramodi
துணை அதிபர் பென்ஸ் அவர்களே, உங்களுக்கும் எனது வாழ்த்துகள்.
***
(வெளியீட்டு அடையாள எண்: 1589422)
வருகையாளர் எண்ணிக்கை : 123