தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

50 ஆவது இந்திய சர்வதேசத் திரைப்பட விழா, சர்வதேசப் படங்களின் போட்டிக்கான நடுவர் அமைப்பை அறிவித்துள்ளது 20 நாடுகளைச் சேர்ந்த 15 திரைப்படங்கள் தங்க மயில் விருதுக்கு போட்டியிடுகின்றன

Posted On: 18 OCT 2019 11:44AM by PIB Chennai

சிறந்த திரைப்படங்களைத் தேர்வு செய்வதற்கான சர்வதேச நடுவர் குழுவை 50 ஆவது இந்திய சர்வதேசத் திரைப்பட விழா அறிவித்துள்ளது.  பிரபல ஒளிப்பதிவாளரும், திரைப்படக் கலை அறிவியல் அகாடமியின் முன்னாள் தலைவருமான திரு ஜான் பெய்லி இந்தக் குழுவின் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.  பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் ராபின் காம்பில்லோ, பிரபல சீன இயக்குநர் திரு ஸாங் யாங், இந்தித் திரைப்பட இயக்குநர் திரு ரமேஷ் சிப்பி உள்ளிட்டோர் நடுவர் குழுவின் உறுப்பினர்களாவார்கள். 

 

இந்திய சர்வதேச திரைப்பட விழாவின்  பொன் விழாவையொட்டி, 20 நாடுகளைச் சேர்ந்த 15 திரைப்படங்கள் தங்க மயில் விருதைப் பெறுவதற்குப் போட்டியிடுகின்றன.  700-க்கும் மேற்பட்ட விண்ணங்களிலிருந்து இந்தப் படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.  லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கிய ஜல்லிக்கட்டு என்னும் மலையாளப் படமும்,  ஆனந்த் நாராயண் மகாதேவன் இயக்கிய மை காட்: க்ரைம் நம்பர் 103/2005 என்னும் மராத்தியப் படமும் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ள இரண்டு இந்தியப் படங்களாகும்.

*************



(Release ID: 1588444) Visitor Counter : 223