பிரதமர் அலுவலகம்
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர்
Posted On:
15 OCT 2019 10:46AM by PIB Chennai
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ், 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன் அடைய செய்ததன் மூலம், இந்தியா பெரும் மைல்கல்லை எட்டியுள்ள நிலையில், சுகாதாரத் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
“ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்கும் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்! ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பலனாக ஒரே ஆண்டில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இலவச சிகிச்சை பெற்றுள்ளனர். நோய்களை குணப்படுத்தியது தவிர, இத்திட்டம் ஏராளமான இந்தியரையும் பெருமிதம் அடைய செய்துள்ளது”.
ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்கும் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்!
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பலனாக ஒரே ஆண்டில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இலவச சிகிச்சை பெற்றிருப்பது ஒவ்வொரு இந்தியரையும் பெருமிதம் அடைய செய்துள்ளது. நோய்களை குணப்படுத்தியது தவிர, இத்திட்டம் ஏராளமான இந்தியர்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது.
@narendramodi
|
சரியாக ஓராண்டுக்கு முன்பு 2018 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட உலகின் மாபெரும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத், நாட்டில் உள்ள 10.74 கோடிக்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு மருத்துவ வசதிகள் எளிதில் கிடைக்க வழிவகை செய்துள்ளது.
ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் ஜன் ஆரோக்கியா திட்டத்தின்கீழ், 16,085 மருத்துவமனைகள் இதற்கான பட்டியலில் சேர்க்கப்பட்டு, 10 கோடிக்கும் மேற்பட்ட மின்னணு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ், ஏறத்தாழ 17,150 சுகாதாரம் & நலவாழ்வு மையங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன.
*************
(Release ID: 1588109)