தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
இந்தியாவின் சர்வதேச திரைப்படவிழாவின் பொன்விழா நிகழ்வுக்கு பதிவுத் தொடக்கம்
இந்த ஆண்டு இந்தியாவின் சர்வதேச திரைப்படவிழா பொன்விழாவாக இருப்பதால் சிறப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. 50-வது சர்வதேச திரைப்பட விழா கோவா மாநிலம் பனாஜியில் 2019 நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெற உள்ளது. 76 நாடுகளிலிருந்து 200-க்கும் அதிகமான சிறந்த திரைப்படங்கள் இதில் திரையிடப்பட உள்ளன. இந்தியப் பிரிவில் 26 கதைப்படங்களும், 15 கதையல்லாப் படங்களும் திரையிடப்படும். பல்வேறு மொழிகளில் 50 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த 12 முக்கியமான திரைப்படங்களும் காண்பிக்கப்பட உள்ளன.
இந்தத் திரைப்பட விழாச் செய்தியைப் பதிவு செய்ய ஆர்வமுள்ள ஊடகவியலாளர்கள் இதன் பிரதிநிதியாகக் கலந்துகொள்வதற்கு பத்திரிகை தகவல் அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது. இது பற்றிய விவரங்களை https://my.iffigoa.org/ என்ற இணையதளத்தில் காணலாம்.
விண்ணப்பங்களை நவம்பர் 10, 2019 வரை பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு கோவா பத்திரிகை தகவல் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம். மின்னஞ்சல் iffi-pib[at]nic[dot]in தொலைபேசி எண் 0832- 2226929.
-----
(रिलीज़ आईडी: 1587819)
आगंतुक पटल : 177