பிரதமர் அலுவலகம்

ஐ நா பொதுச்சபையின் 74-ஆவது அமர்வுக்கு இடையே பிரதமர், பெல்ஜியம் பிரதமரை சந்தித்தது குறித்த செய்திக்குறிப்பு

प्रविष्टि तिथि: 25 SEP 2019 11:30PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, நியூயார்க்கில் பெல்ஜியம் பிரதமர் திரு சார்லஸ் மைக்கேலை செப்டம்பர் 25-ஆம் தேதி ஐ நா பொதுச்சபையின் 74-ஆவது அமர்வில் உயர்மட்டப் பிரிவு கூட்டத்திற்கு இடையே சந்தித்தார்.

ஐரோப்பிய யூனியனின் தலைவராக பிரதமர் சார்லஸ் மைக்கேல் தேர்வு செய்யப்பட்டதற்கு பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்தார்.

இந்தியாவுக்கும், பெல்ஜியத்துக்கும் இடையிலான சிறப்பான உறவு குறித்தும், 2017-ஆம் ஆண்டு பெல்ஜியம் மன்னர் இந்தியாவுக்கு வருகை தந்தபோது எடுக்கப்பட்ட முடிவுகளின் முன்னேற்றம் குறித்தும் இருதலைவர்களும் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்தியாவுக்கும், ஐரோப்பிய யூனியனுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து அவர்கள் விவாதித்தனர். இருதரப்பு முதலீடு மற்றும் வர்த்தக ஒப்பந்தம், அனைத்துவிதமான தொடர்புகள், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் நெருங்கிய ஒத்துழைப்பு, பன்நோக்கு நிறுவனங்கள் இடப்பெயர்வு மற்றும் போக்குவரத்து ஆகியவற்றில் பேச்சுவார்த்தைகளை துரிதப்படுத்தும் முயற்சிகளை தீவிரமாக மேற்கொள்ள அவர்கள் ஒப்புக்கொண்டனர்

இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான 15-ஆவது உச்சி மாநாட்டை மிக விரைவில் நடத்துவதென இரு தலைவர்களும் இசைவு தெரிவித்தனர்.

***


(रिलीज़ आईडी: 1586403) आगंतुक पटल : 160
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , हिन्दी , Marathi , Bengali , Punjabi , Telugu , Kannada