வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

நிலம் கையகப்படுத்துதல்: நகரமயமாக்கலுக்கான ஒரு உருமாற்ற நடவடிக்கை: ஹர்தீப்சிங் புரி

Posted On: 13 SEP 2019 2:47PM by PIB Chennai

நகர்ப்புற வளர்ச்சியில் அரசு தனியார் ஒத்துழைப்பு அடிப்படையிலான நிலம் கையகப்படுத்துதல் கொள்கை, மாபெரும் மாற்றத்தை பிரதிபலிப்பதாக உள்ளதென மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு ஹர்தீப்சிங் புரி தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்படும் நிலங்கள், தனியார் நில உரிமையாளர்களால் மேம்படுத்தப்படும். தனிப்பட்ட உரிமையாளர்கள் / உரிமையாளர்கள் குழு விதிமுறைகள் மற்றும் வழிகாட்டி நெறிமுறைகளுக்குட்பட்டு, நிலங்களை எவ்வளவு பரப்புக்கும் கையகப்படுத்தி அதனை மேம்படுத்தலாம்.

 இந்தக் கொள்கையின்படி 60 : 40  என்ற விகிதத்தில் நிலத்தை மேம்படுத்த வேண்டும். 60% நிலம், உரிமையாளர் / உரிமையாளர் குழுவால்,  குடியிருப்பு, வணிக வளாகம் போன்ற நோக்கங்களுக்காகவும், எஞ்சிய 40% நிலம், சாலை, பசுமைவெளி மற்றும் குடிநீர், கழிவுநீர், மின்சார வசதிகளுக்காகவும் தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

 

 

புதுதில்லியில் இன்று (13.09.2019) பல்வேறு தொழில் கூட்டமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான மாநாட்டில் பேசிய ஹர்தீப் சிங் புரி, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நகரமயமாக்கல் அவசியம் என்றார். மேலும் நிலம் கையகப்படுத்துதல் திட்டத்தின் கீழ், 6,000 ஹெக்டேருக்கு மேற்பட்ட நிலங்கள், அதற்கான இணையதளத்தில்  பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

 

----


(Release ID: 1584993)