பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் நியமனங்கள்

இடுகை இடப்பட்ட நாள்: 11 SEP 2019 1:24PM by PIB Chennai
  1. தற்போது பிரதமரின் கூடுதல் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றி வரும் டாக்டர் பி கே மிஸ்ராவை  11, செப்டம்பர், 2019-லிருந்து பிரதமரின் முதன்மைச் செயலாளராக நியமிப்பதற்கு, நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமரின் பதவிக் காலம் வரை அல்லது மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை  இவற்றில் எது முந்தையதோ அதுவரையினதாக அவரது நியமனம் இருக்கும். 

 

  1. தற்போது பிரதமர் அலுவலக ஓ எஸ் டி-யாகப்  பணியாற்றி வரும்  திரு பி கே சின்ஹாவை, 11, செப்டம்பர், 2019-லிருந்து பிரதமரின் முதன்மை ஆலோசகராக நியமிப்பதற்கு நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமரின் பதவிக் காலம் வரை அல்லது மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை  இவற்றில் எது முந்தையதோ அதுவரையினதாக அவரது நியமனம் இருக்கும். 

----


(வெளியீட்டு அடையாள எண்: 1584769) வருகையாளர் எண்ணிக்கை : 202
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi