மத்திய அமைச்சரவை

இந்தியா தலையீடு காரணமாக உருவான சர்வதேச தாவா தீர்வு ஒப்பந்தங்கள் குறித்த ஐநா தீர்மானத்தில் கையெழுத்திட பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 31 JUL 2019 3:37PM by PIB Chennai

இந்தியக் குடியரசின் தலையீடு காரணமாக உருவான சர்வதேச தாவா தீர்வு ஒப்பந்தங்கள் குறித்த ஐநா தீர்மானத்தில் கையெழுத்திட பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான கூட்டம் 07.08.2019 அன்று சிங்கப்பூரில் அல்லது ஐநா தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.

பயன்:

     இந்தத் தீர்மானத்தில் கையெழுத்திடுவது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அதிகரிக்கும். சர்வதேச நடைமுறையாக உள்ள தாவா தீர்வுக்கான மாற்றினைப் பின்பற்ற இந்தியா உறுதிபூண்டுள்ளது என்பது பற்றி வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சாதகமான சமிக்ஞையை இது அளிக்கும்.

தாவா தீர்வுக்கான மாற்று நடைமுறையை மேம்படுத்துவதற்கான முயற்சி

சர்வதேச வர்த்தக தீர்ப்பாயத்தை இந்தியாவில் வலுப்படுத்தும் சட்டப்பூர்வ அமைப்பாக புதுதில்லி சர்வதேச தீர்ப்பாய மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு வசதியாக வர்த்தக நீதிமன்றங்கள் சட்டம் 2015-ல் மேலும் திருத்தங்கள் செய்வதும், தீர்ப்பாயம் மற்றும் மத்தியஸ்த சட்டம் 1996-ல் திருத்தங்கள் செய்வதும் பரிசீலனையில் உள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேச வர்த்தக தாவாக்களுக்கு தீர்வு காண்பதை ஊக்கப்படுத்தும் முயற்சியாக இது இருக்கும். 

*******


(Release ID: 1580848) Visitor Counter : 245