பிரதமர் அலுவலகம்

மும்பையில் கட்டிடம் இடிந்ததில் ஏற்பட்ட உயிரிழப்புக்கு பிரதமர் இரங்கல்

Posted On: 16 JUL 2019 5:59PM by PIB Chennai

மும்பை டோங்ரி பகுதியில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட உயிரிழப்புக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

“மும்பை டோங்ரியில் கட்டிடம் இடிந்து விழுந்தது வேதனையை ஏற்படுத்துகிறது. இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். இதில் காயம் அடைந்தவர்கள், விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன். மகாராஷ்டிர அரசும், தேசிய பேரிடர் மீட்புக்குழுவும், உள்ளூர் அதிகாரிகளும் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு, பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவி வருகிறார்கள்” என்று பிரதமர் கூறினார்.

 

மும்பை டோங்ரியில் கட்டிடம் இடிந்து விழுந்தது வேதனையை ஏற்படுத்துகிறது. இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். இதில் காயம் அடைந்தவர்கள், விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன். மகாராஷ்டிர அரசும், தேசிய பேரிடர் மீட்புக்குழுவும், உள்ளூர் அதிகாரிகளும் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு, பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவி வருகிறார்கள் : பிரதமர் @நரேந்திரமோடி

— PMO India (@PMOIndia) July 16, 2019

 

*****


(Release ID: 1579043) Visitor Counter : 128