நிதி அமைச்சகம்
பொருளாதார ஆய்வறிக்கை 2018-19: பொது அரசு (மத்திய மற்றும் மாநில அரசுகள்) நிதி ஒருங்கிணைப்பில் செயலாற்றுகிறது
பொருளாதாரம் 2018-19ல் 6.8 விழுக்காடாக உயரும் என்று எதிர்பார்ப்பு
2020-21ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதி பற்றாக்குறை 3 விழுக்காடாக இருக்கும் அரசு கடன் 2024-25ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவீதமாக இருக்கும் என இலக்கு
Posted On:
04 JUL 2019 12:23PM by PIB Chennai
பொருளாதார ஆய்வறிக்கை 2018-19, பொது அரசு (மத்திய மற்றும் மாநில அரசுகள்) நிதி ஒருங்கிணைப்பு மற்றும் நிதி கட்டுப்பாட்டு வழியில் செல்வதாகத் தெரிவிக்கிறது. வருவாயை அதிகரிப்பதும், செலவீனங்களுக்கு மறு முன்னுரிமை அளிப்பதும், பகுப்பாய்வு செய்வதும், நிதி சீர்திருத்தங்களின் முக்கிய அம்சங்களாகும் என்று ஆய்வறிக்கை கூறுகிறது. நேரடி வரி தளத்தை விரிவாக்கம் செய்து ஆழப்படுத்தி, சரக்கு மற்றும் சேவை வரியில் நிலையான கட்டமைப்பை உருவாக்குவதும் இதர முன்னுரிமைகளாகும். செலவீனங்களின் தரத்தை மேம்படுத்துவது முன்னுரிமையில் முக்கிய இடம் பெற்றுள்ளது. புதிதாக சீரமைக்கப்பட்ட நிதிச் சரிவிலிருந்து பிறழாமல், தேவைகளுக்கான ஒதுக்கீட்டை எதிர்கொள்வது முக்கிய சவாலாக உள்ளது. பல்வேறு சிக்கல்கள் இருந்தாலும், 2018-19ல் இந்தியப் பொருளாதாரம் 6.8 விழுக்காடாக (மத்திய புள்ளி விவர அலுவலகம் வெளியிட்டுள்ள மதிப்பீட்டின்படி) உயரும் என்றும், அதேவேளையில் விரிவான பொருளாதாரம் ஸ்திரத்தன்மையில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விரிவான பொருளாதார வளர்ச்சி, முக்கியமாக தற்போது செயல்பட்டு வரும் அடிப்படைக் கட்மைப்புகளுக்கான சீரமைப்பு, நிதி கட்டுப்பாடு, திறமையான சேவைகள் மற்றும் நிதி உள்ளடக்கம் ஆகியவற்றை மையமாக கொண்டதாகும் என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. மத்திய நிதி மற்றும் பெரு நிறுவனங்கள் விவகாரங்களுக்கான அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் 2018-19ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.
சீரமைக்கப்பட்ட நிதி சரிவால், 2020-21ஆம் நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 விழுக்காடு நிதிப் பற்றாக்குறை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மத்திய அரசின் கடன் 2024-25ல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 விழுக்காடாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. 2018-19ஆம் ஆண்டில் மத்திய வரவு செலவு திட்ட அறிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதி கொள்கை அறிக்கை, 2018-19ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3 விழுக்காடு என்ற பற்றாக்குறை இலக்கை அடைவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
2018-19ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவு திட்ட அறிக்கை, முதலீடு மற்றும் வர்த்தக சுழற்சியில் நம்பிக்கை ஊட்டும் எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்ததாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
பொருளாதார ஆய்வறிக்கை, நிதித்துறையில் வரும் ஆண்டில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறது. முதலாவதாக, வளர்ச்சியில் தொய்வு ஏற்படும் என்றும், வருவாய் வசூலில் அது பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவதாக, 2018-19ஆம் நிதியாண்டு முடிவில் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் குறைவாக இருந்தது. எனவே, சரக்கு மற்றும் சேவை வரி வசூல் பெருமளவில் இருந்தால்தான் மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி மேம்பாட்டிற்கு ஆதாரமாக அமையும். மூன்றாவதாக, தற்போது விரிவாக்கப்பட்டுள்ள பிரதமரின் விவசாயிகளுக்கான நேரடி கடன் திட்டம், ஆயுஷ்மான் பாரத் மற்றும் புதிய அரசின் செயலாக்கத் திட்டங்களுக்கு சீரமைக்கப்பட்ட நிதி பற்றாக்குறை இலக்குடன் சமரசம் செய்யாமல், தேவையான நிதி ஆதாரங்களைப் பெற வேண்டும். நான்காவதாக, ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா தடை விதித்திருப்பதால், எண்ணெய் விலையில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும். அதன்மூலம் பெட்ரோலிய மானியமும் உயரும். நடப்பு கணக்கு வரவு செலவுகளிலும் தாக்கத்தை உருவாக்கும். ஐந்தாவதாக, 15-வது நிதி ஆணையம் 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி, ஐந்தாண்டுகளுக்கான தனது அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளது. இதன் பரிந்துரைகள் குறிப்பாக, வரிகளை பகிர்ந்து கொள்வது மத்திய அரசின் நிதி செயல்பாடுகளிலும் தாக்கத்தை உருவாக்கும்.
*****
(Release ID: 1577219)