நிதி அமைச்சகம்

திருமதி நிர்மலா சீதாராமன் மத்திய நிதி மற்றும் பெரும் நிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்

Posted On: 31 MAY 2019 4:12PM by PIB Chennai

திருமதி நிர்மலா சீதாராமன் மத்திய நிதி மற்றும் பெரும் நிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சராக இன்று (31.05.2019) பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவரது அலுவலகத்தில், நிதி மற்றும் பெரும் நிறுவனங்கள் விவகாரத்துறை மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்க உள்ள திரு அனுராக் சிங் தாகூர், நிதிச்செயலர் திரு சுபாஷ் சந்திர கர்க் மற்றும் அமைச்சகத்தின் இதரச் செயலர்கள் அவரை வரவேற்றனர். மத்திய நிதி மற்றும் பெரும் நிறுவனங்கள் விவகாரத்துறையின் முழுமையான பொறுப்பை வகிக்கும் முதல் பெண்மணி திருமதி நிர்மலா சீதாராமன் ஆவார்.

பொறுப்பேற்ற பிறகு நிதி மற்றும் பெரும் நிறுவனங்கள் விவாகரத்துறை அமைச்சகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த செயலர்கள், அமைச்சகத்தின் முக்கியமான முன் முயற்சிகள் மற்றும் கொள்கைகள் பற்றி அமைச்சருக்கு விரிவாக எடுத்துத்துரைத்தார். மேலும், தற்போதுள்ள பிரச்சினைகள் மற்றும் இந்திய பொருளாதாரத்தின் முன்பு உள்ள சவால்கள் குறித்தும் அவருக்கு விளக்கம் அளித்தனர். 

--


(Release ID: 1572969)