புவி அறிவியல் அமைச்சகம்

மிகவும் தீவிரமடைந்துள்ள ஃபானி புயல் கோபால்பூர் மற்றும் சந்த்பலி பகுதிகளுக்கு இடையேயான ஒடிசா கடற்கரையில் மே 3-அன்று மதியம் கரையை கடக்கக்கூடும்

இடுகை இடப்பட்ட நாள்: 01 MAY 2019 12:37PM by PIB Chennai

வங்காள விரிகுடாவில் பானி புயல் மிகவும் தீவிரமடைந்துள்ளதை அடுத்து டிசா, மேற்கு வங்காளம், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீகாகும், விஜயநகரம் மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் புயல் அடுத்த 12 மணி நேரத்தில் மிகவும் தீவிரமடைந்து வடக்கு புறமாக திரும்பி, கோபால்பூர் மற்றும் சந்த்பலி பகுதிகளுக்கு இடையேயான டிசா கடற்கரையில் மே 3-அன்று மதியம் கரையை கடக்கக் கூடும்.

வட ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீகாகும்,  விஜயநகரம் மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் நாளை மிகவும் கனமான மழை பெய்யக்கூடும். மே 3 ஆம் தேதி இப்பகுதிகளில் உள்ள கடற்கரைகளில் பலத்த அல்லது மிகவும் பலத்த மழை பெய்யக்கூடும்.

டிசாவில் உள்ள கடற்கரைப் பகுதிகளில் நாளை பலத்த அல்லது மிகவும் பலத்த மழை பெய்யக்கூடும். டிசாவில் உள்ள கடற்கரைப் பகுதி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் 3 ஆம் தேதியும் பலத்த அல்லது மிகவும் பலத்த மழை பெய்யக்கூடும். அதேபோல் 4-ஆம் தேதியும்  டிசா பலத்த மழை பெய்யக்கூடும்.

மேற்கு வங்காள  கடற்கரைப் பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 3 ஆம் தேதி பலத்த அல்லது மிகவும் பலத்த மழை பெய்யக்கூடும். அதேபோல், 4-ஆம் தேதி மேற்கு வங்காளத்தில் கங்கை கரையோரம் உள்ள பகுதிகளில் பலத்த மழையும் மற்றும் மேற்கு வங்காளம், சிக்கிமில் உள்ள இய மலைப் பகுதிகளில் மிகவும் பலத்த மழையும் பெய்யக்கூடும்.

அருணாச்சலப் பிரதேசம், அசாம் மற்றும் மேகாயாவில் உள்ள சில பகுதிகளில் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் மிக பலத்த மழை பெய்யக்கூடும்.

அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தென் ஆந்திரப் பிரதேச கடற்கரைப் பகுதிகளில் மணிக்கு 180-190 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

தமிழக கடற்கரை, குமரி கடற்கரை, மன்னார் வளைகுடா மற்றும் கேரளா பகுதிகளில் அடுத்த 12 மணி நேரத்தில், மணிக்கு 50 கி.மீ வேகம் வரை பலத்த காற்று வீசக்கூடும்.

வட ஆந்திரப் பிரதேசம், டிசா மற்றும் மேற்கு வங்காளப் பகுதிகளில் 2 ஆம் தேதியன்று மணிக்கு 60 கி.மீ வேகத்தில் காற்று வீசத் தொடங்கி 3 ஆம் தேதியன்று மணிக்கு 200 கி.மீ வேகம் என்ற அளவில் வலுவடையக்கூடும். அதற்குப் பிறகு 12 மணி நேரத்தில் இந்த காற்றின் வேகம் குறையக் கூடும்.

தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைப்பகுதிகளில்  1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரையிலும், வங்காள விரிகுடாவின் வட மேற்குப் பகுதிகள், டிசா மற்றும் மேற்கு வங்காளப் பகுதிகளில் 2 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை  கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்.

இதனை அடுத்து, அடுத்த 12 மணி நேரத்திற்கு வங்காள விரிகுடாவின் தென் மேற்கு மற்றும் தென் கிழக்கு பகுதிகளிலும், வங்காள விரிகுடாவின் மத்திய மேற்குப் பகுதி, புதுச்சேரி வடதமிழ்நாடு மற்றும் தென் ஆந்திரப் பிரதேசத்திலும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதே போல், வங்காள விரிகுடாவின் மத்திய மேற்கு பகுதிகள், வட ஆந்திரப் பிரதேச கடற்கரையில் உள்ள பகுதிகளில் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரையும், வங்காள விரிகுடாவின் தென்மேற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள மேற்கு மத்திய பகுதிகள் மற்றும் டிசா மற்றும் மேற்கு வங்காள கடற்கரைப்குதிகளில்  2 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


(வெளியீட்டு அடையாள எண்: 1571423) வருகையாளர் எண்ணிக்கை : 443
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Malayalam