பிரதமர் அலுவலகம்

பிரதமர் நாட்டு மக்களிடம் உரை

Posted On: 27 MAR 2019 2:11PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, நாட்டு மக்களிடையே இன்று உரையாற்றினார்.

      “ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிப் பயணத்திலும் மிகுந்த, கவுரவம் மற்றும் வருங்காலத் தலைமுறையினரிடையே வரலாற்று விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய தருணங்கள் ஏற்படும். செயற்கைக் கோள் எதிர்ப்பு (ASAT) ஏவுகனையை , இந்தியா, வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. மிஷன் சக்தி  வெற்றிகரமாக நடந்தேறியதற்காக சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

      மிகவும் சிக்கலான மிஷன் சக்தி, மிக அதிவேகத்துடன், குறிப்பிடத்தக்க  நுட்பத்துடன் பரிசோதிக்கப்பட்டுள்ளது.  இந்தியாவில் உள்ள தலைசிறந்த விஞ்ஞானிகளின் திறமை மற்றும் நமது விண்வெளித் திட்டங்களின் வெற்றியை இது பிரதிபலிக்கிறது.

       இரண்டு காரணங்களின் அடிப்படையில் இந்த மிஷன் சக்தி சிறப்பு வாய்ந்தது:

  1. இது போன்ற சிறப்பு வாய்ந்த & நவீன திறமையைப் பெற்ற 4-வது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
  2. ஒட்டுமொத்த முயற்சியும் உள்நாட்டைச் சார்ந்தது.

விண்வெளித்துறையில் வலிமை வாய்ந்த நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது! இது இந்தியாவை வலிமைப்படுத்துவதுடன், பாதுகாப்பு மிகுந்த நாடாக மாற்ற அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தவும் உதவும்”, என்று  பிரதமர் தெரிவித்துள்ளார்.



(Release ID: 1569586) Visitor Counter : 142