பிரதமர் அலுவலகம்
இலவச தொலைக்காட்சி வரிசையில் தங்கள் சொந்த மாநிலத்திற்கான தொலைக்காட்சி அலைவரிசையைப் பெற்ற மக்களை பிரதமர் பாராட்டினார்
Posted On:
09 MAR 2019 6:15PM by PIB Chennai
முதல் முறையாக இலவச தொலைக்காட்சித் தொகுப்பில் தங்கள் சொந்த மாநிலங்களுக்குரிய தொலைக்காட்சி அலைவரிசைகளை பெற்ற மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டுதல்களைத் தெரிவித்தார்.
“இலவச தொலைக்காட்சித் தொகுப்பின் மூலம் பிரசார் பாரதி நிறுவனம் மேலும் 11 மாநிலங்களுக்கான தொலைக்காட்சி அலைவரிசைகளை செயற்கைக்கோள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.” இதில் வடகிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஐந்து மாநிலங்களுக்கான தொலைக்காட்சி அலைவரிசைகளும் அடங்கும். மண்டல அளவில் கலாச்சாரங்களை வலுப்படுத்துவதோடு, அந்தப் பகுதிகளின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவதில் இந்த தொலைக்காட்சி அலைவரிசைகள் பெரும்பங்கு வகிக்கும்.
முதல் முறையாக தங்களுக்கென பிரத்யேக தொலைக்காட்சி அலைவரிசைகளை பெறுவதற்காக சட்டிஸ்கர், ஹரியானா, கோவா, ஹிமாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, திரிபுரா, உத்தராகண்ட் ஆகிய மாநில மக்களுக்கு வாழ்த்துக்கள்!” என பிரதமர் தெரிவித்தார்.
*****
(Release ID: 1568477)