நீர்வளத் துறை அமைச்சகம்
2017-18 முதல் 2019-20 வரையிலான காலத்தில் நாடு முழுவதற்குமான வெள்ள நிர்வாக பணிகள் மற்றும் எல்லைப் பகுதிகளுக்கான நதிநீர் நிர்வாக செயல்பாடுகள் மற்றும் பணிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இடுகை இடப்பட்ட நாள்:
07 MAR 2019 2:35PM by PIB Chennai
2017-18 முதல் 2019-20 வரையிலான காலத்தில் நாடு முழுவதற்குமான வெள்ள நிர்வாக பணிகள் மற்றும் எல்லைப் பகுதிகளுக்கான நதிநீர் நிர்வாக செயல்பாடுகள் மற்றும் பணிகளுக்கான “வெள்ள நிர்வாகம் மற்றும் எல்லைப் பகுதிகள் திட்டத்திற்கு” பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கான மொத்த ஒதுக்கீடு ரூ.3,342 கோடி.
பயன்கள்:
வெள்ள நிர்வாகம், மண் அரிப்புத் தடுப்பு மற்றும் கடல் அரிப்பு தடுப்பை நாடு முழுவதும் தீவிரமாக செயல்படுத்துவதற்கு இந்தத் திட்டம் உதவும். வெள்ளம் மற்றும் அரிப்புகளிலிருந்து நகரங்கள், கிராமங்கள், தொழிற்சாலைகள், தொலைத் தொடர்பு சாதனங்கள், விவசாய நிலங்கள், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் ஆகியவை பாதுகாக்கப்படும்.
*****
(வெளியீட்டு அடையாள எண்: 1567980)
வருகையாளர் எண்ணிக்கை : 244