மத்திய அமைச்சரவை

ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு ( திருத்த) அவசரச் சட்டம் 2019-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 28 FEB 2019 10:32PM by PIB Chennai

“ஜம்மு காஷ்மீர் இட ஒதுக்கீடு (திருத்த) அவசரச் சட்டம் இந்திய குடியரசுத் தலைவரால் வெளியிடப்படுவதற்கான ஜம்மு காஷ்மீர் அரசின் பரிந்துரைக்கு  பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடுச் சட்டம் 2004-க்கிற்கான திருத்தங்களின் காரணமாக சர்வதேச எல்லைக்கு அருகே உள்ள பகுதிகளில் வாழும் மக்கள், எல்லைக் கட்டுப்பாட்டுக்கோட்டுக்கு அருகில் வாழும் மக்களுக்கான இடஒதுக்கீட்டின் வரம்புக்குள் கொண்டுவரப்படுவார்கள்.

தாக்கம்

            அவசரச் சட்டத்தின் பிரகடனம்,  சர்வதேச எல்லைக்கு அருகில் உள்ள பகுதிகளில் வாழும் மக்கள், எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் வாழும் மக்களுக்கான இடஒதுக்கீட்டின் வரம்புக்குள் கொண்டுவரப்படுவதற்கு வழி வகுக்கும்.

----
 



(Release ID: 1567029) Visitor Counter : 121