பிரதமர் அலுவலகம்
தேசிய போர் நினைவு சின்னத்தை ஒய்வு நாட்டிற்கு அர்ப்பணித்து, ஓய்வு பெற்ற படைவீரர்களுடன் பிரதமர் உரையாற்றினார்
Posted On:
25 FEB 2019 7:03PM by PIB Chennai
புது தில்லியில், அணையா தீபத்தை ஏற்றி, பிரதமர் திரு. நரேந்திர மோடி தேசிய போர் நினைவுச் சின்னத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார். பின்னர் நினைவுச் சின்னத்தை அவர் பார்வையிட்டார்.
பெருந்திரளான ஓய்வு பெற்ற வீரர்களிடையே உரையாற்றிய பிரதமர், இந்திய இராணுவ வீரர்களின் சாகசமும், அர்ப்பணிப்பும் உலகின் வலுவான இராணுவங்களில் இந்திய இராணுவமும் ஒன்று என்று கருதப்படுவதற்கு காரணமாகும்.
எதிரிகளோடு மோதும் போதும் இயற்கைப் பேரிடர்களின்போதும், நம்மைக் காப்பதில் வீரர்கள் எப்பொழுதும் முன்னிலையில் இருந்துள்ளனர் என்று பிரதமர் கூறினார். இப்போது இராணுவத்தில் பணிபுரியும் வீரர்களுக்கும் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களுக்கும் ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியதை பிரதமர் நினைவுகூர்ந்தார். இதனால், 2014 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில், ஓய்வூதியம் 40 சதவீதமாக அதிகரித்து, வீரர்களின் சம்பளம் 55 சதவீதம் வரை அதிகரித்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.
பல்நோக்கு மருத்துவமனைகளை அமைப்பதற்கான கோரிக்கை அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற மூன்று மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
இராணுவத்தினரின் மீது தமது அரசு கொண்டுள்ள அக்கறையை விவரித்த பிரதமர், இராணுவ தினம், கடற்படை தினம், விமானப்படை தினம் ஆகிய நாள்களில் வீரர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு அளிக்கப்படும் உத்வேகம் குறித்து பேசினார். ஆகஸ்ட் 15, 2017 அன்று துவங்கப்பட்ட வீரர்களுக்கான விருது குறித்தும் பிரதமர் தெரிவித்தார். போர் விமானிகளாகப் பணிபுரிய பெண்களுக்கும் இப்பொழுது வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். குறுகிய காலத்திற்கு பணிபுரியும் பெண் அலுவலர்கள், ஆண் அலுவலர்களுக்கு சமமாக நிரந்தரமாக பணிபுரிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
பாதுகாப்பு கருவிகள் வாங்குவதற்கான முறையை மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறிய பிரதமர், அரசின் அணுகுமுறையில் வெளிப்படைத்தன்மையும் சமவாய்ப்பும் உறுதி செய்யப்படுகிறது என்று கூறினார். “இந்தியாவில் உற்பத்தி செய்வோம்” திட்டத்தின் கீழ் இதற்கான உத்வேகம் அளிக்கப்படுகிறது என்று பிரதமர் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் ஏற்பாடு செய்திருந்த 70 அமைதி காக்கும் இயக்கங்களில், இந்திய இராணுவம் 50 இயக்கங்களில் பங்கேற்று ஏறத்தாழ 2 லட்சம் வீரர்களும் இதில் கலந்து கொண்டனர். 2016-ல் இந்திய கடற்படை ஏற்பாடு செய்திருந்த, சர்வதேச கப்பல் ஆய்வு நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட நாடுகளின் கடற்படைகள் பங்கேற்றன. ஒவ்வொரு ஆண்டும் இந்திய இராணுவம் தோழமை நாடுகளுடன் இணைந்து 10 பெரிய இராணுவப் பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது என்று பிரதமர் தெரிவித்தார்.
இந்திய இராணுவத்தினாலும், அதன் சர்வதேச உறவுகளினாலும் இந்தியப் பெருங்கடலில், பெரும் அளவில் கடற்கொள்ளை குறைந்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். நீண்டகாலமாக இந்திய இராணுவம் 1.8 லட்சம் புல்லட் ப்ரூப் ஜாக்கெட்கள் வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைத்து வருகிறது என்று குறிப்பிட்ட பிரதமர், கடந்த நான்கரை ஆண்டுகளில் மத்திய அரசு 2.30 லட்ச புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுகளை கொள்முதல் செய்துள்ளது என்று தெரிவித்தார். மத்திய அரசு நவீன விமானங்கள், ஹெலிகாப்டர்கள், நீரமூழ்கிக்கப்பல்கள், கப்பல்கள் மற்றும் ஆயுதக் கலன்களைக் கொண்டு இந்திய இராணுவத்தை வலுப்படுத்தி வருகிறது. நீண்ட காலமாக எடுக்கப்படாமல் இருந்த முடிவுகள் தேசிய நலனுக்காக இப்போது எடுக்கப்பட்டு வருகின்றன என்று குறிப்பிட்டார்.
தேசியப் போர் நினைவுச் சின்னம் உள்பட தேசியக் காவலர்கள் நினைவுச்சின்னமும் அமைக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் கூறினார். சர்தார் பட்டேல், பாபா சாகேப் அம்பேத்கர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் போன்ற பெருந்தலைவர்களை மத்திய அரசு அங்கீகரித்து வருகிறது. மேலும், தேசிய நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு முடிவுகளை எடுக்கும் என்று பிரதமர் கூறினார்.
******
(Release ID: 1566345)
Visitor Counter : 238