மத்திய அமைச்சரவை

தேசிய ஊரகப் பொருளாதார மாற்றத்திற்கான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 19 FEB 2019 9:00PM by PIB Chennai

தீன்தயாள் அந்தியோதயா திட்டம் மற்றும் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின்கீழ், ‘தேசிய ஊரகப் பொருளாதார மாற்றத்திற்கான திட்டத்தை‘ நடைமுறைப்படுத்த பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.  இந்தத் திட்டம் உலக வங்கியின் கடனுதவியுடன் செயல்படுத்தப்பட உள்ளது.

     இந்தத் திட்டத்தால் அளிக்கப்படவுள்ள தொழில்நுட்ப உதவியானது ஊரகப் பகுதிகளில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், நிதியுதவி கிடைக்கச் செய்யவும்,  மின்னணு நிதியுதவி வசதிகளுக்கான முன்முயற்சிகளை மேற்கொள்ளவும், வழிவகுக்கும்.    

*****


(Release ID: 1565419) Visitor Counter : 110