பிரதமர் அலுவலகம்
பிரதமர், ஜார்கண்டுக்கு நாளை வருகை
ஹசாரிபாக், தும்கா மற்றும் பலமு மருத்துவக் கல்லூரிகளை தொடங்கி வைக்கிறார்.
ஹசாரிபாகில், பழங்குடியினத்தவர் கல்வியியல் மையம், ஆச்சார்யா வினோபா பாவே பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுகிறார்
பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்
பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டம்- ஆயுஷ்மான் பாரத் பயனாளிகளுடன் கலந்துரையாடுகிறார்.
Posted On:
16 FEB 2019 7:23PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜார்கண்டில் உள்ள ஹசாரிபாக் மற்றும் ராஞ்சி ஆகிய நகரங்களுக்கு நாளை பிப்ரவரி 17- ம்தேதி வருகை தருகிறார். சுகாதாரம், கல்வி, குடிநீர் விநியோகம், துப்புரவு ஆகியவை தொடர்பான பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள பழங்குடியின மக்களுக்கு பல்வேறு திட்டங்கள், பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
ஹசாரிபாகில், பிரதமர் பின் வரும் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்: பிரதமர் ஹசாரிபாக், தும்கா மற்றும் பலமு ஆகிய நகரங்களில் 3 மருத்துவக் கல்லூரி கட்டிடங்களைத் திறந்து வைக்கிறார். ஹசாரிபாக், தும்கா, பலமு, ஜாம்ஷெட்பூர் ஆகிய நகரங்களில் தலா 500 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவ மனைகளுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.
பிரதமர், ராம்கார் மற்றும் ஹசாரிபாக் மாவட்டங்களில் ஊரதக குடிநீர் விநியோகத்திற்கான நான்கு திட்டங்களைத் துவக்கி வைக்கிறார். இவ்விரு மாவட்டங்களிலும் அவர் மேலும் 6 ஊரக குடிநீர் விநியோகத் திட்டங்களுக்கும் ஹசாரிபாகில் நகர்ப்புற குடிநீர் விநியோகத் திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
பிரதமர், கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்தின் கீழ் சாஹிப் கஞ்ச் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மதுசூதன் மலைத்தொடர் திட்டத்தையும் துவக்கி வைக்கிறார்.
பிரதமர், ராம்காரில் மகளிர் பொறியியல் கல்லூரிக் கட்டடத்தையும் திறந்து வைக்கிறார்.
பிரதமர், குறிப்பாக பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளில் குடிநீர் விநியோகத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
பிரதமர் ஹசாரிபாகில் பழங்குடியின மக்கள் கல்வியியல் மையம், ஆச்சார்யா வினோபா பாவே பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
விவசாயிகளுக்கு, ஈநாம் திட்டத்தின் கீழ், கைபேசி வாங்குவதற்கான நேரடி மானிய பரிமாற்றத்தைக் குறிக்கும் வகையில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு காசோலைகளை பிரதமர் வழங்குகிறார் .
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் ஊட்டச்சத்து அளவை மேம்படுத்தும் வகையில், இலவச பால் வழங்கும் திட்டத்தை குறிக்கும் வகையில், பள்ளி மாணவர்களுக்கு பால் பொட்டலங்களை பிரதமர் வழங்குகிறார்.
பிரதமர் திரு மோடி, பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டமான ஆயுஷ்மான் பாரத், பயனாளிகளுடன் ராஞ்சியில் கலந்துரையாடுகிறார்.
----
(Release ID: 1564997)
Visitor Counter : 134