மத்திய அமைச்சரவை
தேசிய அனல் மின் கழகம், என் டி பி சி-யின் கட்டுமானத்தில் உள்ள திட்டங்களிலிருந்து அது அமையும் மாநிலங்களுக்கு கூடுதல் மின்சாரத்தை வழங்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
06 FEB 2019 9:43PM by PIB Chennai
என் டி சி பி-யின் தெலங்கானா சூப்பர் அனல் மின் திட்டத்தின் உற்பத்தியில் 85 சதவீதத்தை தெலங்கானா அரசுக்கு ஒதுக்கவும், என் டி பி சி-யின் துணை நிறுவனமான பத்ரட்டு வித்யூத் உத்படம் நிகம் நிறுவனத்தின் பத்ரட்டு அனல் மின் நிலையத்தின் உற்பத்தியில் 85 சதவீதத்தை ஜார்க்கண்ட் மாநில அரசுக்கு ஒதுக்கவும் வகை செய்யும் மத்திய மின்சக்தி அமைச்சகத்தின் திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
விவரங்கள்:
இந்த இரண்டு திட்டங்களும் இரண்டு கட்டங்களாக அமைக்கப்பட உள்ளன.
ஆந்திரப்பிரதேச மறு சீரமைப்புச் சட்டம் 2014-ன்படி அனல்மின் கழகம் உருவாக்கப்பட உள்ள தெலங்கானா மாநிலத்தில் 4000 மெகா வாட் மின் திட்டத்தை இச்சட்டத்தின் 13-வது பட்டியலில் குறிப்பிட்டுள்ளபடி அமைக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பத்ரட்டு அனல்மின் நிலையத்தின் (பி டி பி எஸ்) நான்காயிரம் மெகாவாட் விரிவாக்கத் திட்டத்திலிருந்து கிடைக்கும் மின்சாரத்தில் 85 சதவீதத்தை ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு ஒதுக்க வேண்டியது ஜார்க்கண்ட் மாநிலத்திற்கும் என் டி பி சி-க்கும் இடையே ஏற்பட்ட கூட்டுத்தொழில் முயற்சி ஒப்பந்தத்தின்படி முக்கியமான நிபந்தனையாகும்.
தற்போது இந்த இரண்டு திட்டங்களின் முதல் கட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது.
தாக்கம்:
தெலங்கானா மாநிலத்திற்கு தெலங்கானா சூப்பர் மின்சார திட்டத்திலிருந்து உயர்ந்த அளவு மின்சாரத்தை ஒதுக்குவதால் ஆந்திரப்பிரதேச மறு சீரமைப்பு திட்டத்தின் 13-வது பட்டியலில் கண்டுள்ள தேவையான நடவடிக்கைகளை எடுப்பதை மத்திய அரசு உறுதி செய்கிறது. இதன் மூலம் புதிய மாநிலத்தின் மேம்பாடு மற்றும் நிலையான வளர்ச்சி உறுதி செய்யப்படுகிறது. அதே போல பி டி பி எஸ்-லிருந்து ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு கூடுதல் மின்சாரத்தை ஒதுக்குவதால் அம்மாநிலத்தின் மின்சார நிலை மேம்பாடு அடையும். அதே சமயம் மத்திய அரசின் இயக்கமான அனைவருக்கும் மின்சாரம் என்ற குறிக்கோளை அடையவும் இது வகை செய்கிறது.
------------
(Release ID: 1563074)
Visitor Counter : 172