நிதி அமைச்சகம்
ரயில்வேத் துறைக்கு ரூ.64,587 கோடி ஒதுக்கீடு
प्रविष्टि तिथि:
01 FEB 2019 1:16PM by PIB Chennai
2019 – 20-ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையில், ரயில்வேத் துறைக்கு ரூ.64,587 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்துறைக்கான ஒட்டுமொத்த மூலதன செலவீனம் ரூ.1,58,658 கோடியாகும். இந்தத் தகவலை மத்திய நிதியமைச்சர் திரு பியூஷ் கோயல் நாடாளுமன்றத்தில் இன்று (01.02.2019) இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும்போது தெரிவித்தார்.
அகல ரயில்பாதை மார்க்கங்களில் உள்ள அனைத்து ஆளில்லா லெவல் கிராஸிங்குகளும் அகற்றப்பட்டு விட்டதால், இந்த ஆண்டு இந்திய ரயில்வே வரலாற்றில் பாதுகாப்பான ஆண்டாகும் என்று அவர் கூறினார்.
வேகம், சேவை மற்றும் பாதுகாப்பில் உலகத் தரத்திலான அனுபவத்தை தரவல்ல “வந்தே பாரத் விரைவு ரயில்” உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டு அறிமுகம் செய்யப்படவுள்ளது. நமது பொறியாளர்களின் தொழில்நுட்பத்தால் உருவாக்கியுள்ள இந்த ரயில், “இந்தியாவில் உற்பத்தி” திட்டத்திற்கு உத்வேகத்தை அளிக்கும்.
*****
(रिलीज़ आईडी: 1562325)
आगंतुक पटल : 186