சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த ஆண்டினை நினைவுகூரும் கார் பயணம்

Posted On: 30 JAN 2019 1:43PM by PIB Chennai

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த ஆண்டினை நினைவுகூரும் கார் பயணத்திற்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்தியாவிலும், பங்களாதேஷ், மியான்மர் ஆகிய நாடுகளிலும் வரலாற்றுப்பூர்வமாக காந்திஜி-யுடன் தொடர்புடைய இடங்களின் வழியாக இந்தப் பயணம் நடைபெறும். காந்திஜியின் வாழ்க்கையில் முக்கியத்துவம் பெற்ற இடங்களை இந்தப் பயணம் இணைப்பதோடு, சாலைப் பாதுகாப்பு விஷயங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இது, இந்தியாவிலும் உலகம் முழுவதிலும் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த ஆண்டினை நினைவுகூரும் விதமாக, சென்ற ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி மத்திய அரசால் தொடங்கப்பட்ட ஒராண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகும். 

      தேசிய சாலைப் பாதுகாப்பு வாரம் தொடங்குகின்ற பிப்ரவரி மாதம், நான்காம் தேதியன்று தில்லி ராஜ்காட்டிலிருந்து கார் பயணமும் தொடங்கும்.  இந்தப் பயணம் பிப்ரவரி 24-அன்று மியான்மரில் உள்ள யாங்கோனில் நிறைவடையும். இந்தப் பயணம் யாங்கோனை அடையும்போது, சுமார் 7,250 கிலோமீட்டர் தூரம் சென்றிருக்கும்.

      பயண வழித்தடம் முழுவதும் மகாத்மா காந்தியின் மகத்தான சிந்தனைகளைப் பரப்புவது இந்த நிகழ்வின் நோக்கமாகும். இந்த மகத்தான புதல்வரை இந்தியாவிலும், பங்களாதேஷிலும், மியான்மரிலும் நினைகூருவது “அமைதிக்கான பயணமாக” இருக்கும்.  சாலைகளில் பாதுகாப்பான பயணத்தை வலியுறுத்துவதாகவும் இது அமையும்.

      மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

*****



(Release ID: 1561964) Visitor Counter : 207


Read this release in: English , Hindi , Bengali , Gujarati