பிரதமர் அலுவலகம்

பிரதமர் நாளை தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி பயணம் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்

Posted On: 18 JAN 2019 6:45PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (19.01.2019) தாத்ரா & நாகர் ஹவேலி தலைநகர் சில்வாசா செல்கிறார். 

இந்தப் பயணத்தின்போது, தாத்ரா & நாகர் ஹவேலியில் உள்ள சாய்லி-ல் மருத்துவக் கல்லூரிக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். அத்துடன் டாமன் & டையூ மற்றும்  தாத்ரா & நாகர் ஹவேலி-ல் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைப்பதற்கான கல்வெட்டையும் பிரதமர் திறந்து வைக்கவுள்ளார்.

எம்-ஆரோக்கியா செயலி மற்றும் தாத்ரா & நாகர் ஹவேலி-யில் வீடு வீடாக சென்று கழிவுப் பொருட்களை சேகரித்தல், அவற்றை பிரித்தெடுத்தல் மற்றும் திடக்கழிவுகளை டிஜிட்டல் முறையில் பதப்படுத்துவதற்கான பணிகளையும் அவர் தொடங்கி வைக்கவுள்ளார்.

அந்த யூனியன் பிரதேசத்தின் தகவல் தொழில்நுட்பக் கொள்கையையும் பிரதமர் வெளியிடவுள்ளார்.

பிரதமரின் ஜன் ஆரோக்கியா திட்ட சான்றிதழ்கள் மற்றும் வன உரிமை சான்றிதழ்களையும் சில பயனாளிகளுக்கு அவர் வழங்கவுள்ளார்.

சில்வாசாவில் உள்ள சாய்லி-யில் அமையும் மருத்துவக் கல்லூரி, தாத்ரா & நாகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் மூன்றாம் நிலை மருத்துவ வசதிகளை மேம்படுத்துவதாக இருக்கும்.  இந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள், குறிப்பாக இரண்டு யூனியன் பிரதேசங்களையும் சேர்ந்த பழங்குடியின மற்றும் கிராமப்புறப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு மிகுந்த பயனளிப்பதாக அமையும்.  அத்துடன் மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பையும் மேம்படுத்துவதாக இது அமையும்.  இந்த மருத்துவக் கல்லூரி மற்றும்  மருத்துவ மற்றும் துணை மருத்துவ கல்லூரிக்கான  விடுதி மற்றும்  குடியிருப்பு வளாகங்கள் கட்டுவதற்காக ரூ.210 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

***************

விகீ/ எம்எம்/ வேணி

 



(Release ID: 1560605) Visitor Counter : 135