பிரதமர் அலுவலகம்

முதல் பிலிப் கோட்லர் விருது – பிரதமருக்கு வழங்கப்பட்டது

Posted On: 14 JAN 2019 2:03PM by PIB Chennai

புது தில்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில், முதல் முறையாக வழங்கப்படும் பிலிப் கோட்லர் குடியரசு விருது பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது.  

மக்கள், லாபம் மற்றும் கோள் ஆகியவற்றுக்கு இந்த விருது முக்கியத்துவம் அளிக்கிறது. இந்த விருது ஆண்டுதோறும் தேசிய தலைவர்களுக்கு வழங்கப்படும்.

விருது பத்திரத்தில் கூறப்பட்டதாவது:  

            “நாட்டின் மிகச் சிறந்த தலைவராக செயல்பட்டதை முன்னிட்டு திரு. நரேந்திர மோடி இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  இந்தியாவுக்கான அவரின் தன்னலமற்ற சேவையும், ஓய்வற்ற உழைப்பும், நாட்டில் உன்னதமான பொருளாதார, சமூக மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை கொண்டுவந்துள்ளது.”

     மேலும்: “அவரின் தலைமையில், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் மதிப்புக்கூட்டல் உற்பத்திக்கான (இந்தியாவில் உற்பத்தி செய்வோம்) மையமாக இந்தியா கண்டறியப்பட்டு, தகவல் தொழில்நுட்பம், கணக்கு,   நிதித்துறை ஆகியவற்றில் தொழில்முறை சேவை வழங்கும் சர்வதேச மையமாகவும் இந்தியா மாறியுள்ளது.”  

     “அவரின் தொலைநோக்குப் பார்வை, சமூக நன்மை மற்றும் நிதித்துறை உள்ளடக்கம் போன்றவற்றுக்காக தனித்துவம் வாய்ந்த அடையாள எண், ஆதார் என டிஜிட்டல் புரட்சியை (டிஜிட்டல் இந்தியா) உண்டாக்கியுள்ளது.  தொழில்முனைவோர் ஊக்குவிப்பு, எளிதாக தொழில் செய்வது மற்றும் இந்தியாவுக்கு 21-வது நூற்றாண்டின் உள்கட்டமைப்பு வசதியை இது வழங்குகிறது.”

     இந்தியாவில் உற்பத்தி செய்வோம், தொடங்கிடு இந்தியா, டிஜிட்டல் இந்தியா மற்றும் தூய்மை இந்தியா திட்டம் குறித்து இந்த விருதுப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  “உற்பத்தி மற்றும் தொழில் செய்வதற்கான உலகத் தரவரிசையில் இலாபகரமான மையமாக இந்தியாவை மாற்றியுள்ளது.”

     உலகளவில் பிரபலமான முனைவர் பிலிப் கோட்லர், நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் கெலாக் மேலாண்மை கல்லூரியின் விற்பனை துறையில் முனைவராகப் பணியாற்றி வருகிறார்.  முனைவர் பிலிப் கோட்லருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ள காரணத்தினால், அமெரிக்காவின் ஜார்ஜியா நகரத்தில் உள்ள எமோரி பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் டாக்டர் ஜக்தீஷ் ஷேத், பிரதமருக்கு இந்த விருதை வழங்க நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  

*****



(Release ID: 1559861) Visitor Counter : 266