மத்திய அமைச்சரவை

போலந்து நாட்டின் கேட்டோவைஸ் நகரில் (2-15 டிசம்பர் 2018) நடைபெற்ற 24-வது மாநாட்டில் இந்தியாவின் அணுகுமுறைக்கு அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 02 JAN 2019 5:53PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் போலந்து நாட்டின் கேட்டோவைஸ் நகரில் 2-15 டிசம்பர் 2018-ல் நடைபெற்ற 24-வது மாநாட்டில்  (கான்பரன்ஸ் ஆப் பார்ட்டீஸ்) பருவநிலை மாற்றம் குறித்த ஐக்கிய நாடுகளின் வரைவுச் சட்டத்திற்கு இந்தியாவின் நிலைப்பாடு குறித்து நடைடபெற்ற கலந்தாய்வுக்கு தற்போது ஒப்புதல் வழங்கப்பட்டது. இதற்கு முன்னர் 2018 நவம்பர் 28-ந் தேதி வழங்கப்பட்ட ஒப்புதலின் தொடர்ச்சியாகும் இது.

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தலைமையில் இந்திய தூதுக்குழு இந்த மாநாட்டில் பங்கேற்றது. 2020 ஆம் ஆண்டுக்கு பிறகு பாரீஸ் உடன்பாட்டை அமல்படுத்துவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை இறுதி செய்வதே இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.  பருவநிலை மாற்றம் குறித்த ஐக்கிய நாடுகளின் வரைவுச் சட்டத்திற்கு அதன் கொள்கைகள் மற்றும் அம்சங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவின் அணுகுமுறை அமைந்தது.

*****

 

 



(Release ID: 1558371) Visitor Counter : 166