பிரதமர் அலுவலகம்
அந்தமான்-நிக்கோபார் தீவுகளுக்கு பிரதமர் பயணம்
Posted On:
28 DEC 2018 3:54PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி, இம்மாதம் 29, 30 ஆகிய நாட்களில் அந்தமான்-நிக்கோபார் தீவுகளுக்கு செல்லவிருக்கிறார். பிரதமர் 29 ஆம் தேதியன்று மாலை போர்ட்பிளேர் சென்றடைவார்.
30 ஆம் தேதியன்று கார் நிக்கோபாரில் உள்ள சுனாமி நினைவகத்துக்கு பிரதமர் செல்லவிருக்கிறார். நினைவகத்தில் மலரஞ்சலி செலுத்தும் பிரதமர், இழந்த ஆன்மாக்களின் சுவர் அருகே மெழுகுவர்த்தி ஏற்றுவார். ஆராங்கில் உள்ள இந்திய தொழில் நிறுவனத்தை தொடங்கிவைத்து சில உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார். பொதுக் கூட்டம் ஒன்றிலும் அவர் உரையாற்றுவார்.
பிறகு போர்ட்பிளேரில் உள்ள தியாகிகள் தூணுக்கு மலரஞ்சலி செலுத்துவார். இந்நகரில் உள்ள சிற்றரை சிறைக்கும் பிரதமர் செல்லவிருக்கிறார்.
போர்ட்பிளேரில் உள்ள சவுத்பாயிண்டில் பிரதமர் உயர் கம்பத்தில் கொடியேற்றவிருக்கிறார். போர்ட்பிளேரின் மெரீனா பூங்காவில் உள்ள நேதாஜியின் சிலைக்கு அவர் மலரஞ்சலி செலுத்துவார். இந்திய மண்ணில் மூவர்ணக் கொடியை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஏற்றியதன் 75-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், நேதாஜி விளையாட்டு அரங்கில் பிரதமர் நினைவு தபால்தலை, நாணயம் மற்றும் முதல்நாள் உறையை வெளியிடுவார். அந்தமான்-நிக்கோபார் தீவுகளுக்கான புதுமை மற்றும் ஆரம்ப நிலை நிறுவனங்களுக்கான கொள்கையையும் பிரதமர் வெளியிடுவார். சூரியசக்தி கிராமம் மற்றும் ஏழு மெகாவாட் திறன்கொண்ட சூரியசக்தி மின்நிலையத்தையும் பிரதமர் தொடங்கிவைப்பார். பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர், மக்களிடையே உரையாற்றுவார்.
*****
(Release ID: 1557649)