தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் 2018 ஆம் ஆண்டின் ஆண்டறிக்கை.

Posted On: 19 DEC 2018 3:16PM by PIB Chennai

இந்திய அரசின் வெகு மக்கள் முகமாக விளங்குவது தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம். இந்திய அரசின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள், பணிகள், கொள்கைகள் மற்றும் நிகழ்ச்சிகள் தொடர்பான  செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது இந்த அமைச்சகத்தின் தலையாய பணியாகும்.

இவ்வாண்டு இந்த அமைச்சகம் பல கொள்கை முடிவுகளை எடுத்து பற்பல புதுமைச் செயல்களை நிகழ்த்தியுள்ளது.

அவற்றை பற்றிய ஒரு சிறு தொகுப்பு:

 

  • விளம்பரம் மற்றும் காட்சி இயக்குநரகம், கள விளம்பரப் பிரிவு,  இசை மற்றும் நாடகப் பிரிவு ஆகிய மூன்று துறைகளை ஒன்றிணைத்து மக்கள் தொடர்பு அலுவலகத்தை இவ்வாண்டு உருவாக்கியது.
  • பதிப்பகத்துறையின் ஆண்டு நூல் மக்களால் பெரிதும் விரும்பி வாங்கப்படும் நூலாகும். இவ்வாண்டும்,   2018ம் ஆண்டு நூல்,  பதிப்பகத் துறையால் வெளியிடப்பட்டது. இந்த நூல், மின்னணு நூலாகவும் வெளியிடப்பட்டது. இதனைக் கைபேசி,  கணினி,  டேப்லெட் மற்றும் கணினி படிப்பான்கள் மூலம் படிக்கலாம்.
  • பத்திரிக்கையாளர் நல்வாழ்வு திட்ட கமிட்டி மீளமைப்பு:

மிகக் குறைந்த அளவு அரசு உறுப்பினர்களை உள்ளடக்கிய இந்தக் கமிட்டியில், முதன்முறையாக பத்திரிகையாளர்களும் கூட சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.

  • தீனதயாள் உபாத்தியாயா கல்வி உதவித்தொகை: பத்திரிகை துறையில் வியத்தகு சாதனை புரிந்த இந்தியர்களுக்கு ஊக்கத்தொகை.
  • வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலைவாய்ப்பு குறித்து ஒரு சிறப்பு இதழ் திட்டம் இதழால் வெளியிடப்பட்டது. இதில் வாழ்வாதார வாய்ப்புகள், தொழில் முனைவு உதவித்தகவல்கள், வேலைவாய்ப்புத்தகவல்கள், முத்ரா உதவியால் முன்னேறியோரின் வெற்றிக்கதைகள் பதிப்பாயின.

 

  • மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் தொடர்பான மல்டிமீடியா பொருள் காட்சி: இந்தக் கண்காட்சியில் அண்மைய,  நவீன தொழில்நுட்பங்கள் கையாளப் பட்டிருந்தன 3டி வீடியோக்கள்,  மகாத்மாவோடு தாமி(செல்ஃபி) போட்டோ மற்றும் மகாத்மாவோடு வினாடி வினா போன்ற பல்வேறு தொழில்நுட்பக் கண்டுபிடிப்புக்களை மின்னணு முறையில் இந்தக் கண்காட்சியில் அமைத்திருந்தார்கள்.
  • ரிபப்ளிகன்எதிக், லோக்தந்திர கேஸ்வர் ஆகிய நூல்கள், குடியரசுத் தலைவரின் பேச்சுக்களின் தொகுப்பாய் பதிப்பகத் துறையினரால் வெளியிடப்பட்டன.

 

  • ஒலிபரப்பு பிரிவு

 

 

  • 15வது ஆசிய உச்சிமாநாடு டில்லியில் நடந்தேறியது.
  • அகில இந்திய வானொலி நிலையத்தின் நிகழ்ச்சிகள் அமேசான் ஸ்மார்ட் ஸ்பீக்கர்களில் கிடைக்கும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டது.
  • ஒன்பது நவீன டி எஸ் என் ஜி வேன்கள், தூர்தர்ஷனின் பயன்பாட்டுக்காய்  வாங்கப்பட்டு செயல் பாட்டுக்கு வந்தன.  இவற்றில் நான்கு வடகிழக்கு மாநிலங்களில் இயங்குகின்றன.

 

  • திரைப்பட பிரிவு:

 

  •  இந்தியா இஸ்ரேல் இடையான கூட்டுத் திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • 65 ஆவது தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. இதில் மறைந்த வினோத் கன்னா அவர்களுக்கு தாதாசாகிப் பால்கே விருதும்,  ஸ்ரீதேவி அவர்களுக்கு சிறந்த நடிகைக்கான விருதும் வழங்கப்பட்டன.
  • ஏசியான் இந்திய திரைப்பட திருவிழா தில்லியில் நடைபெற்றது திரைப்படத்துறைக்கு என்று சிறப்பாக ஒரு போர்ட்டல் உருவாக்கப்பட்டு இயக்கப்பட்டுள்ளது.
  • கான் திரைப்படவிழாவில் இந்தியாவிற்கான ஒரு தனி பெவிலியன் அமைக்கப்பட்டது.
  • ஐரோப்பியக் கூட்டமைப்புக்காக ஒரு சிறப்புத் திரைப்படத் திருவிழா இந்தியா முழுமையிலும் நடைபெற்றது. இத்திருவிழா,  புது தில்லி, சென்னை ,போர்ட் பிளேயர், புதுச்சேரி, கொல்கத்தா ,ஜெய்ப்பூர், விசாகப்பட்டினம், திருச்சூர், ஐதராபாத் மற்றும் கோவா ஆகிய இடங்களுக்கு ஜூனில் இருந்து ஆகஸ்ட் வரை பயணித்தது
  • ரோம் திரைப்படத்  திருவிழாவிலும் வீடியோ சிட்டா என்கிற அமைப்பில் இந்திய பெவிலியன் அமைக்கப்பட்டது. இதில் இந்தியா தொடர்பான பல்வேறு செய்திகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன
  • 49 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடந்தேறியது.

 

 

********************


(Release ID: 1557509) Visitor Counter : 294