சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
டாக்டர். பி. ஆர். அம்பேத்கரின் 63-வது நினைவு தினத்தன்று தேசம் அவருக்கு அஞ்சலி செலுத்தியது.
இடுகை இடப்பட்ட நாள்:
06 DEC 2018 2:17PM by PIB Chennai
பாரத ரத்னா பாபாசாகேப் டாக்டர். பி. ஆர். அம்பேத்கரின் 63-வது நினைவு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் தலைமையில் தேசம் அவருக்கு அஞ்சலி செலுத்தியது. நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பாபாசாகேப் சிலைக்கு இன்று காலை அவர் மலர் அஞ்சலி செலுத்தினார்.
குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு, பிரதமர் திரு. நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் திருமதி. சுமித்ரா மகாஜன் மற்றும் பல மத்திய அமைச்சர்களும் முக்கியப் பிரமுகர்களும் நமது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை டாக்டர். அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்தினர்.
******
(வெளியீட்டு அடையாள எண்: 1554862)
வருகையாளர் எண்ணிக்கை : 196