பிரதமர் அலுவலகம்
திரு.அம்பரீஷ் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
25 NOV 2018 9:58AM by PIB Chennai
திரு.அம்பரீஷ் மறைவுக்கு பிரதமர் திரு.நரேந்திரமோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
திரு.அம்பரீஷ் நடிகர் என்ற முறையிலும், அரசியலில் அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு காரணமாகவும், எப்போதும் நினைவுகூறத்தக்கவர். அவர், கர்நாடக நலனுக்காக மத்தியிலும், மாநிலத்திலும் தீவிரமாக குரல் கொடுத்து வந்தவர் ஆவார். அவரது மறைவுச் செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், என்று பிரதமர் தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
******
ஏடிஜி/எம்எம்/உமா
(வெளியீட்டு அடையாள எண்: 1553765)
வருகையாளர் எண்ணிக்கை : 204