மத்திய அமைச்சரவை

அரசு தனியார் பங்களிப்பு (பிபிபி) மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்தியத் திறன் நிறுவனம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

प्रविष्टि तिथि: 24 OCT 2018 1:23PM by PIB Chennai

அரசு தனியார் பங்களிப்பு மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்தியத் திறன் நிறுவனம் அமைக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. குறிப்பிட்ட இடங்களில் தேவை மற்றும் உட்கட்டமைப்பு வசதி அடிப்படையில் இந்திய திறன் நிறுவனத்தை மேம்படுத்தும் வாய்ப்புகள் ஆராயப்படும்.

பலன்கள்:

உயர்தர திறன் பயிற்சி, பயனுறு ஆராய்ச்சிக் கல்வித் தொழில்துறையுடன்  நேரடி மற்றும் அர்த்தமுள்ள இணைப்பை  ஏற்படுத்துவதன் மூலம் இந்தியப் பொருளாதாரத்தின் முக்கியத் துறைகள் சர்வதேச சந்தைப் போட்டியில் சிறந்து  விளங்க இந்தத் திறன் நிறுவனம் துணை புரியும்.

நாடெங்கும் எதிர்கால ஆசைகளோடு இருக்கும் இளைஞர்கள்  தரமான திறன் பயிற்சி பெற இந்த நிறுவனம் உதவும். மேலும் தொழில்துறைகளுடன் இருக்கும் தனது இணைப்பைக் கொண்டு இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பை உறுதி செய்யவும், அந்தந்த துறைகளில் சர்வதேச சந்தைப் போட்டியில் சிறந்து விளங்கவும் இந்த நிறுவனம் வழிவகுக்கும்.

தனியார் துறை நிறுவனங்களின் நன்மைகளைக்  கொண்டிருப்பதாலும் அரசாங்க நிலத்தை  மூலதனமாக அளிப்பதாலும்  நிபுணத்துவம், சிறந்த அறிவுத் திறன் மற்றும் போட்டித்தன்மை நிறைந்த புதிய நிறுவனங்கள் உருவாக இந்த ஒப்புதல் வழிவகுக்கும்.

*************


(रिलीज़ आईडी: 1550510) आगंतुक पटल : 200
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Marathi , Bengali , Assamese , Gujarati , Telugu , Kannada , Malayalam