பிரதமர் அலுவலகம்
அக்டோபர் 12 அன்று தேசிய மனித உரிமை ஆணையத்தின் வெள்ளிவிழா நிறுவன நாள் நிகழ்ச்சியில் பிரதமர் கலந்துகொள்ளவிருக்கிறார்
प्रविष्टि तिथि:
11 OCT 2018 5:36PM by PIB Chennai
அக்டோபர் 12 அன்று நடைபெறவுள்ள தேசிய மனித உரிமை ஆணையத்தின் நிறுவன நாள் வெள்ளிவிழா நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துகொள்ளவிருக்கிறார்.
அந்நிகழ்ச்சியில் பிரதமர் சிறப்புக் கடிதஉறையையும் அஞ்சல்தலையையும் வெளியிடுவார். தேசிய மனித உரிமை ஆணையத்தின் வலைத்தளத்தின் புதிய பதிப்பையும் பிரதமர் தொடங்கிவைக்கவுள்ளார். சிறப்பான தேவைகள் வேண்டுவோருக்கு அணுகத்தக்கதாகவும் பயன்படுத்துவோருக்கு இணக்கமான தாகவும் இந்த இணையதளம் விளங்கும்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுவார்.
(रिलीज़ आईडी: 1549477)
आगंतुक पटल : 146