பிரதமர் அலுவலகம்

ஹரியானாவுக்கு வருகை தந்த பிரதமர் சர் சோட்டு ராமின் உருவச்சிலையை திறந்து வைத்ததோடு, ரயில்பெட்டி புதுப்பிக்கும் தொழிற்சாலைக்கான அடிக்கல்லை நாட்டினார்

प्रविष्टि तिथि: 09 OCT 2018 6:45PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி ஹரியானாவில் உள்ள ரோத்தக்கில் உள்ள சாம்ப்ளாவுக்கு வருகை தந்தார்.

  தீன பந்து சர் சோட்டுராமின் சிலையை பிரதமர் திறந்து வைத்தார்.

 பின்பு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சோன்பத் ரயில்பெட்டி புதுப்பிக்கும் தொழிற்சாலைக்கான அடிக்கல்லை நாட்டினார். இந்த தொழிற்சாலை கட்டி முடிக்கப்படும் போது வடமண்டலத்தில் உள்ள ரயில்பெட்டிகளின் பெரிய அளவிலான பழுது பார்க்கும் மற்றும் பராமரிக்கும் பணிகளுக்கான தொழிற்சாலையாக இது விளங்கும்.

    நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இந்தியாவிற்கு பங்காற்றிய சமூக சீர்த்திருத்தவாதிகளில் ஒருவராக சவுத்ரி சோட்டு ராம்ஜி விளங்கினார் என்று  கூறினார். சர் சோட்டு ராமின் வலிமையான குரல் ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் நலிந்தவர்களுக்கான குரலாக ஒலித்தது  என்று அவர் கூறினார்.

    ரயில்பெட்டி புதுப்பிக்கும் தொழிற்சாலை சோன்பத்தின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ஹரியானா மாநிலத்தின் வளர்ச்சிக்கும் பங்களிக்கும் என்றும் பிரதமர் கூறினார். இத்தொழிற்சாலை இம்மண்டலத்தில் உள்ள சிறு தொழில் முனைவோருக்கு பலன் அளிப்பதோடு, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும் என்று அவர் கூறினார்.

  சர் சோட்டு ராமின் தொலைநோக்குப் பார்வையை பிரதமர் பாராட்டினார். இது தொடர்பாக அவர் பாக்ரா அணை பற்றியும் பேசினார். விவசாயிகளுக்கு உரிய  விலையை கொடுப்பதில் சர் சோட்டு ராமின் முன்முயற்சிகளை குறிப்பிட்ட பிரதமர்,  இது  தொடர்பாக மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றியும் பேசினார்.

   ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் முன்னேற்றம் பற்றி பேசிய பிரதமர், சுகாதார உறுதித் திட்டத்தின்  முதல் பயனாளி இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று கூறினார்.  இரண்டு வாரக் காலத்தில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்தத் திட்டத்தினால் பயனடைந்திருப்பதற்கு அவர் திருப்தி தெரிவித்தார்.

   “பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ” திட்டத்தின்  வெற்றிப் பற்றி பிரதமர் குறிப்பிட்டார். ஹரியானாவின் கிராமங்களில் பிறந்த பெண் குழந்தைகள் சர்வதேச அரங்கில்  நாட்டிற்கு பெருமை சேர்த்திருப்பதாக கூறிய அவர், ஹரியானாவின் இளைஞர்கள் இந்தியாவை ஒரு சர்வதேச விளையாட்டு சக்தியாக  உருவாக்குவதில் உதவியுள்ளதாக  கூறினார்.  சர் சோட்டு ராமின் கனவுகளை நனவாக்குவதில் நாம் துரிதமாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்பதற்கு இவை அடையாளங்களாக இருக்கின்றன என்றார்.

------


(रिलीज़ आईडी: 1549126) आगंतुक पटल : 208
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Marathi , Bengali , Assamese , Gujarati , Kannada