மத்திய அமைச்சரவை
சுகாதாரம் மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளில் இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான் இடையேயான ஒத்துழைப்பு உறவிற்கான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
प्रविष्टि तिथि:
26 SEP 2018 4:07PM by PIB Chennai
சுகாதாரம் மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளில் இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான் இடையேயான ஒத்துழைப்பு உறவிற்கான ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கீழ்கண்ட துறைகளுக்கான ஒத்துழைப்பு உறவு இந்த ஒப்பந்தத்தின் கீழ் வரும்:
-
- மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கு தேவையான பயிற்சி மற்றும் ஆய்வு கூட உபகரணங்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் உற்பத்தி துறையில் உள்ள வர்த்தக வைப்புகளை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பு
- ஆரம்ப சுகாதார வசிதிகளை வலுப்படுத்துதல் மற்றும் சுகாதார சேவை வசதிகளை ஏற்படுத்துதல்
- மருத்துவம் மற்றும் சுகாதார ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் இந்த துறைகளில் உள்ள அனுபவத்தை பரிமாறுதல்.
- தொலைமருத்துவம் மற்றும் இணைய சுகாதார தகவல் முறை ஆகிய துறைகளில் உள்ள அனுபவங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் பரிமாற்றம்.
- தாய் சேய் சுகாதார நலன்பாதுகாப்பு;
- ஆட்கொல்லி நோய் கண்காணிப்பு, தொற்று நோய் மற்றும் தொற்றா நோய் கட்டுப்பாடு ஆகியவற்றிற்கான நுட்பங்கள் மற்றும் உத்திகள் உருவாக்குதல் மற்றும் மேம்படுத்துதல்
- மருந்துகள் மற்றும் மருந்து பொருட்களின் ஒழுங்குமுறை கட்டுப்பாடு;
- இரு தரப்பிற்கும் பரஸ்பர ஆர்வம் உள்ள துறைகளில் ஒத்துழைப்பு
இந்த ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் தகவல்களை விரிவுபடுத்தவும் அதனை நடைமுறைபடுத்துவதை கண்காணிக்கவும் செயற்குழு நியமிக்கப்படும்.
*********
(रिलीज़ आईडी: 1547384)
आगंतुक पटल : 141