பிரதமர் அலுவலகம்

ஆப்கானிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் அதிபர் இந்தியா வருகை

Posted On: 19 SEP 2018 4:08PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடியின் அழைப்பையேற்று ஆப்கானிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் அதிபர் டாக்டர் முகமது அஷ்ரப் கனி, இந்தியாவிற்கு இன்று (19.09.2018) வருகை தந்தார்.

   இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையேயான பன்முகப்பட்ட ஒத்துழைப்பு நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து, இருத் தலைவர்களும் ஆய்வு மேற்கொண்டு ஆக்கப்பூர்வமாக மதிப்பீடு செய்தனர். இருதரப்பு வர்த்தகம், ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் அளவைத் தாண்டி அதிகரித்திருப்பதற்கு அவர்கள் மனநிறைவு தெரிவித்தனர். 12.09.2018-லிருந்து 15.09.2018வரை மும்பையில் நடைபெற்ற இந்தியா-ஆப்கானிஸ்தான் வர்த்தகம் மற்றும் முதலீட்டுக் கண்காட்சித் திருப்திகரமாக நிறைவடைந்ததுப் பற்றியும்,  இருத் தலைவர்களும் பாராட்டுத் தெரிவித்தனர். சபஹார் துறைமுகம் மற்றும் விமான சரக்குப் போக்குவரத்து முனையம் உட்பட போக்குவரத்தை வலுப்படுத்துவதற்கு அவர்கள் உறுதித் தெரிவித்தனர். ஆப்கானிஸ்தானில் அடிப்படை கட்டமைப்பு, மனிதவள மேம்பாடு மற்றும் பிற திறன் வளர்ப்புத் திட்டங்கள் போன்ற அதிகபட்ச தாக்கத்தை ஏற்படுத்தும் பிரிவுகளில் புதிய வளர்ச்சிப் பங்களிப்பை ஆழப்படுத்தவும் அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

  அமைதி மற்றும் மறுவாழ்வுப் பணிகளிலும், ஆப்கானிஸ்தான் மற்றும் அதன் மக்கள் மீது பயங்கரவாதமும், தீவிரவாதமும்  திணித்துள்ள சவால்களை எதிர்கொள்வதிலும், தமது அரசு மேற்கொண்டுள்ள முன்முயற்சிகளை அதிபர் கனி, பிரதமருக்கு எடுத்துரைத்தார்.

  ஆப்கன் தலைமையேற்கும், ஆப்கனுக்குரிய, ஆப்கன் கட்டுப்பாட்டில் உள்ள அமைதி மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்கு இந்தியாவின் ஆதரவை பிரதமர் மீண்டும் உறுதி செய்தார். இதன் மூலம் ஆப்கானிஸ்தான் ஒன்றுபட்ட, அமைதி நிறைந்த, அனைவரையும் உள்ளடக்கிய ஜனநாயக நாடாகவும், பொருளாதார ரீதியில் துடிப்புமிக்க நாடாகவும் விளங்கமுடியும். ஆப்கானிஸ்தான் அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கும், ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கும் இந்தியாவின் ஊசலாட்டமற்ற உறுதியை பிரதமர் அளித்தார். ஆப்கானிஸ்தானில் விலை மதிப்பற்ற மனித உயிர்களின் பேரிழப்புக்குக் காரணமான பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் வன்முறைக்கு பிரதமர் தெளிவான கண்டனத்தை தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான ஆப்கானிஸ்தான் மக்கள் மற்றும் தேசப் பாதுகாப்புப் படைகளுடன் அவர் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தினார்.

  சர்வதேச அரங்கில் பல்வேறு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பும், கலந்தாலோசனையும் பற்றி மனநிறைவு தெரிவித்த இருத்தரப்பினரும், இந்த ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த ஒப்புக் கொண்டனர். வளம், அமைதி,  நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சியில் பிராந்திய அளவிலும், சர்வதேச அளவிலுமான பங்களிப்பில் மேலும் கூடுதல் நெருக்கத்துடனான  செயல்பாட்டை வலுப்படுத்துவது என்றும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

********



(Release ID: 1546756) Visitor Counter : 113