மத்திய அமைச்சரவை

விண்வெளியை அமைதி நோக்கங்களுக்குப் பயன்படுத்துவதில் ஒத்துழைக்க இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 12 SEP 2018 4:29PM by PIB Chennai

விண்வெளியை  அமைதி நோக்கங்களுக்குப் பயன்படுத்துவதில் ஒத்துழைக்க இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான  புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில்  விவரிக்கப்பட்டது.  இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் 26.07.2018 அன்று ஜோகன்னஸ்பர்கில் கையெழுத்தானது.  

இதன் முக்கிய அம்சங்கள்:

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் ஒத்துழைப்புக்கான துறைகள் வருமாறு:

  1. புவியின்  தொலை உணர்வு
  2. செயற்கைக் கோள் மூலம் தகவல் தொடர்பு மற்றும் செயற்கைக்கோள் அடிப்படையில் கடற்பயணம்.
  3. விண்வெளி அறிவியல் மற்றும் கோள்கள் கண்டறிதல்
  4. விண்கலம் செலுத்து வாகனங்கள், விண்வெளி ஆய்வு முறைகள், நிலப்பகுதி ஆய்வு முறைகள் பயன்பாடு
  5. புவி சார்ந்த கருவிகள் மற்றும்  தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட விண்வெளி தொழில்நுட்ப நடைமுறை செயல்பாடுகள்.
  6. இருதரப்பினரால் தீர்மானிக்கப்படுகிற ஒத்துழைப்புக்கான மற்ற அம்சங்கள்.

  இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி,  கீழ் காணும் வடிவங்களில் ஒத்துழைப்பு செயல்படுத்தப்படும்.

  1. பரஸ்பர பயன் மற்றும் நலனுக்கான  கூட்டு விண்வெளி திட்டங்களுக்கு திட்டமிடுதல், செயல்படுத்துதல்
  2. விண்வெளி செயல்பாடுகளுக்கு ஆதரவாக இருக்கும் தரை நிலையங்களை அமைத்தல், செயல்படுத்துதல் மற்றும் பராமரிப்பு.
  3. செயற்கைக் கோள் மூலமான தகவல்கள், சோதனைகளின் முடிவுகள் மற்றும் அறிவியல் தொழில்நுட்ப தகவல் பரிமாற்றம்.
  4. கூட்டான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செயல்பாடுகள்
  5. கூட்டான திட்டங்களில் பங்கேற்கும் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் சார்ந்தவர்களை பரிமாற்றம் செய்து கொள்ளுதல்.
  6. விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் திறனை கட்டமைத்தல், சமூக நோக்கங்களுக்காக விண்வெளித் திட்டங்களை செயல்படுத்துதல்.
  7. கூட்டாக பயிலரங்குகள், கருத்தரங்குகள் மற்றும் அறிவியல் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தல்.
  8. பரஸ்பர ஒப்புதலுடன் இருதரப்பினரும் ஒத்துழைப்புக்கான கூடுதல் வடிவங்களை  எழுத்துப் பூர்வமாக தீர்மானிக்கலாம்

பயன்கள்:

   இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பது விண்வெளி அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புவிசார்ந்த  தொலை உணர்வு உள்ளிட்ட பயன்பாடுகள் செயற்கைக்கோள் மூலம் தகவல் மற்றும் செயற்கைக்கோள் அடிப்படையில் கடற்பயணம், விண்வெளி அறிவியல் மற்றும் கோள்கள் கண்டறிதல், விண்கலம் மற்றும் விண்வெளி ஆய்வு முறைகள், புவி ஆய்வு  முறைகள்  பயன்பாடு, விண்வெளித் தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல் போன்ற  துறைகளில் ஒத்துழைத்துத்  திறன் வளர்ச்சியைப் பெற முடியும்.

------



(Release ID: 1545896) Visitor Counter : 143