மத்திய அமைச்சரவை

எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி அதிகரிப்பு முறைகளை மேம்படுத்தவும், ஊக்கப்படுத்தவும் கொள்கை வகுப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 12 SEP 2018 4:25PM by PIB Chennai

எண்ணெய் மற்றும் எரிவாயுவின் உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்துவதற்காக தற்போதுள்ள எண்ணெய் வளப் பகுதிகளில் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும் முறைகள் /  தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல் மற்றும் ஊக்குவித்தலுக்கான  கொள்கையை வகுப்பதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பது என்பது ஷேல் ஆயில் மற்றும் எரிவாயு உற்பத்தி, போன்றவற்றையும் உள்ளடக்கியதாகும். மரபுசாரா பெட்ரோலிய பொருட்களை  கண்டறிதலுக்கும், உற்பத்திக்கும், கூடுதல் மூலதனம் தேவைப்படுவதோடு  சிக்கலான தொழில்நுட்பம் தேவைப்படுவது  சவால் மிக்கது.  இதற்கு அடிப்படைக் கட்டமைப்பு, போக்குவரத்து, நிதி உதவி, சாதகமான சுற்றுச்சூழல் ஆகியவை தேவைப்படுகிறது. 

 கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் மூலம் சுற்றுச்சூழல்  பராமரிப்பை உருவாக்குவது, தொழில்துறை  - ஆராய்ச்சிப் பிரிவு, ஒத்துழைப்பு, மரபுசாரா எண்ணெய் உற்பத்திக்கான முறைகளையும்  தொழில்நுட்பங்களையும் செயல்படுத்த ஒப்பந்தாரர்களை  ஊக்குவிப்பது ஆகியவை இந்த கொள்கையின் முக்கிய நோக்கமாகும். ஒப்பந்த பிரிவுகள் மற்றும் நியமனப் பிரிவுகளுக்கும் இந்தக் கொள்கை பொருந்துவதாகும்.  புதிய முதலீட்டை  கொண்டுவரவும், பொருளாதார செயல்பாடுகளை விரைவுப்படுத்தவும், கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இந்தக் கொள்கை உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதுள்ள  எண்ணெய் வளப்பகுதிகளில் புதிய நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும், உற்பத்தியை அதிகரிக்க தொழில்நுட்ப ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும் இந்தக் கொள்கை உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 ஒவ்வொரு எண்ணெய் வளப்பகுதியிலும் உற்பத்திக்கான அளவு, பொருத்தமான தொழில்நுட்பங்கள் பயன்பாடு, சாத்தியமான நிதி முதலீடு ஆகியவற்றை முறைப்படி மதிப்பீடு செய்வதற்கு இந்தக் கொள்கை வழி வகுக்குகிறது. மத்திய அரசால்  அறிவிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் எண்ணெய் வளப்பகுதிகளை ஆய்வு செய்வதும்,  வணிக ரீதியாக எண்ணெய் உற்பத்தியை தொடங்குவதற்கு முன், முன்னோட்டத்தை நடத்துவதும் கட்டாயமாக்கப்படுவது இந்தக் கொள்கையில் உள்ள மற்ற சில  முக்கிய அம்சங்களாகும். பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், பெட்ரோலியப் பொருட்கள்  தலைமை இயக்ககம் ஆகியவற்றின் பிரதிநிதிகளையும், இந்தத்  துறை சார்ந்த நிபுணர்களையும் கொண்ட குழு இந்தக் கொள்கையைக் கண்காணித்து அமல்படுத்தும்.  இந்தக் கொள்கை அறிவிக்கை செய்யப்பட்ட தேதியிலிருந்து பத்தாண்டுகளுக்கு அமலில் இருக்கும். இருப்பினும், எண்ணெய், எரிவாயு  / மரபுசாரா பெட்ரோலிய திட்டங்களில் உற்பத்தி தொடங்கிய தேதியிலிருந்து 120 மாதங்களுக்கு ஊக்கத்தொகை கிடைக்கும். எண்ணெய் வளப்பகுதிகளில் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டங்களைப் பொறுத்தவரை,  குறிப்பிட்ட அளவை  எட்டிய தேதியிலிருந்து ஊக்கத்தொகை  வழங்கப்படும். இந்தக் கொள்கையின் கீழ் பல்வேறு நடைமுறைகளைப் பூர்த்தி செய்வதற்கு குறிப்பிட்ட காலவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.   குறிப்பிட்ட எண்ணெய் கிணறுகளில் புதிய முறைகளை அமல்படுத்தியதன் பயனாக உற்பத்தி அதிகரிக்கும் போது செஸ் வரியின் ஒரு பகுதியை தள்ளுபடி செய்வதன் மூலமும் ஊக்கத்தொகை கிடைக்கும். தற்போதுள்ள எண்ணெய் உற்பத்தியிலிருந்து ஐந்து சதவீதம் கூடுவதன் மூலம் அடுத்த 20 ஆண்டுகளில் 120 மில்லியன் மெட்ரிக் டன் கூடுதலாக உற்பத்தி இருக்கும் என்று  மதிப்பிடப்படுகிறது.  எரிவாயுவைப் பொருத்தவரை தற்போதுள்ள உற்பத்தியிலிருந்து 3 சதவீதம் அதிகரிப்பதன் மூலம் அடுத்த 20 ஆண்டுகளில் 52 பில்லியன் கனமீட்டர் உற்பத்தி அதிகரிக்கும்.

------



(Release ID: 1545893) Visitor Counter : 135