உள்துறை அமைச்சகம்

சுதந்திர தின காவல் துறை பதக்கங்கள் அறிவிப்பு

Posted On: 14 AUG 2018 2:58PM by PIB Chennai

இவ்வாண்டு சுதந்திரத் தினத்தையொட்டி 942 காவல் துறையினருக்கு பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வீரதீர செயலுக்கான குடியரசுத் தலைவரின் காவல் துறை பதக்கம் 2 பேருக்கும், வீர தீர செயலுக்கான காவல் துறை பதக்கம் 177 பேருக்கும், தனிச்சிறப்பு வாய்ந்த சேவைக்கான குடியரசுத் தலைவரின் காவல் துறை பதக்கம் 88 பேருக்கும், சிறந்த தகுதிக்கான காவல் துறை பதக்கம் 675 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்தைச் சேர்ந்த 3 காவல் துறை அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவரின் தனிச் சிறப்பு வாய்ந்த காவல் துறை பதக்கமும், சிறந்த தகுதிக்கான காவல் துறை விருது 22 காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.



(Release ID: 1542999) Visitor Counter : 138