மத்திய அமைச்சரவை

தேசிய பேரிடர் மீட்புப் படையில் (NDRF) கூடுதலாக மேலும் நான்கு அணிகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 09 AUG 2018 4:59PM by PIB Chennai

மத்திய அமைச்சரவைக் கூட்டம் பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் புதுதில்லியில் இன்று (ஆகஸ்ட் 9) நடைபெற்றது. அதில், தேசிய பேரிடர் மீட்புப் படையில் (NDRF) கூடுதலாக நான்கு பட்டாலியன்களை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அந்தப் படையை வலுப்படுத்துவதற்கு ரூ. 637 கோடி அளிக்கவும் இசைவு தெரிவிக்கப்பட்டது.

 

விவரங்கள்:

 

  • நாட்டின் நிலவியல் பரப்பைக் கருத்தில் கொண்டு விரைந்து செயல்படுவதே கூடுதலாக நான்கு அணிகள் அமைப்பதன் நோக்கம் ஆகும்.

 

  • இந்த நான்கு உத்தேச அணிகளில் இரு அணிகள் இந்திய திபெத் எல்லை போலீஸ் படையிலிலும் (ITBP), எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) அசாம் ரைஃபிள் படை (ARs) ஆகியவற்றில் தலா ஓர் அணியும் உருவாக்கப்படும்.
  • பிறகு இந்த நான்கு பட்டாலியன்களும் தேசிய பேரிடர் எதிர்செயல் படையின் (NDRF) பட்டாலியன்களாக மாற்றப்படும். இந்த அணிகள் ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரா கண்ட், தில்லி தேசிய தலைநகர் பிராந்தியம் ஆகிய நான்கு பகுதிகளில் நிறுத்திவைக்கப்படும்.

 

பின்னணி:

 

தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) 2006ம் ஆண்டு  உருவாக்கப்பட்ட சிறப்புப் படையாகும். இயற்கைச் சீற்றங்களும் மனிதர்களால் நேரும் விபத்துகளின்போது மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக உருவாக்கப்பட்டது. தற்போது நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF22 பட்டாலியன்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

 

*****

 

 

 

 

 

 

 


(Release ID: 1542357) Visitor Counter : 177