மத்திய அமைச்சரவை

வெளிநாடுகளில் பாதுகாப்பு சார்ந்த முக்கியமான கட்டமைப்பு திட்டங்கள் தொடர்பான ஒப்பந்தங்களை பெற வகை செய்யும் சலுகை நிதியுதவித் திட்டத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 01 AUG 2018 6:14PM by PIB Chennai

வெளிநாடுகளில் பாதுகாப்பு சார்ந்த முக்கியமான கட்டமைப்பு திட்டங்கள் தொடர்பான ஒப்பந்தங்களை பெற வகை செய்யும் சலுகை நிதியுதவித் திட்டத்தின் முதல் நீட்டிப்பிற்கு இன்று புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது.

விவரம்

     கடந்த 2015-16 ஆம் ஆண்டு முதல் வெளிநாடுகளில் முக்கியமான பாதுகாப்பு தொடர்பான கட்டமைப்பு திட்டங்களை இந்திய நிறுவனங்கள் பெறுவதற்கு மத்திய அரசு சலுகை நிதியுதவி திட்டத்தின் மூலம் உதவி வருகிறது. இந்த திட்டத்தினுடைய நோக்கம் இன்றைக்கும் பொருந்துவதாக உள்ளதால், இந்தத் திட்டத்தை அடுத்த 5 ஆண்டுகளுககு அதாவது 2018-லிருந்து 2023 வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நிதி தொடர்பான விளைவுகள்

இந்த திட்டத்தில் கடன் வழங்கும் வங்கிக்கு வட்டிக்கு சமமான ஆதரவு தொகையை வழங்குவதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான துறை நிதிநிலை அறிக்கையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

 

Year

ஆண்டு

2018-19

 

2019-20

 

2020-21

 

2021-22

 

2022-23

 

Total

மொத்தம்

IES Amount (In US$ million)

வட்டிக்கு சமமான ஆதரவு தொகை (மில்லியன் அமெரிக்க டாலரில்)

6.5

 

10.00

 

18.75

 

29.00

 

32.00

 

96.25

 

IES Amount (In INR crore)

வட்டிக்கு சமமான ஆதரவு தொகை (இந்திய ரூபாய் கோடியில்)

42.25

 

65.00

 

121.88

 

188.50

 

208.00

 

625.63

 

பின்குறிப்பு

மதிப்பீடு செய்யப்பட்டுள்ள வட்டிக்கு சமமான ஆதரவு தொகை ஏற்கனவே உள்ள திட்டங்களுக்கு மட்டும் பொருந்தும்.

முக்கிய விளைவுகள்

     சலுகை நிதியுதவித் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்னர், வெளிநாடுகளில் மிகப்பெரிய கட்டமைப்பு திட்டங்களைப் பெற அதற்கான நிதி மிகவும் அதிகமாக இருந்ததால், இந்திய நிறுவனங்கள் பிற நாடுகளோடு போட்டிபோட இயலவில்லை.  சீனா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா போன்ற பிற நாடுகள் சிறந்த நெறிமுறைகளோடு குறைந்த வட்டி விகிதத்தில் நீண்ட காலத்திற்கு கடனுதவி அளித்ததால், அந்த நாடுகளைச் சார்ந்த ஏலதாரர்களுக்கு இது சாதகமாக இருந்தது.

     இந்திய பாதுகாப்பு நலன்சார்ந்த திட்டங்களை இந்திய நிறுவனங்கள் செயல்படுத்தும் போது சலுகை நிதியுதவி திட்டத்தினால், வேலைவாய்ப்பு திட்டத்திற்கு தேவையான பொருட்களின் தேவை மற்றும் இயந்திரங்களின் தேவை இந்தியாவிற்கு அதிகரித்ததோடு, இந்தியாவின் நன்மதிப்பு உயர்ந்தது.

செயலாக்க யுக்தி மற்றும் இலக்கு

     இந்தத் திட்டத்தின் மூலம் இந்திய வெளியுறவு அமைச்சகம், இந்திய பாதுகாப்பு நலன்சார்ந்த குறிப்பிட்டத் திட்டங்களை தெரிவு செய்து, அதனை பொருளாதார விவகாரங்கள் துறைக்கு அனுப்பும். இந்தத் திட்டத்தில் பயன்பெறக் கூடிய முக்கியமான பாதுகாப்பு நலன்சார்ந்த திட்டங்களை பொருளாதார விவகாரங்களுக்கான துறையின் செயலர் தலைமையிலான குழு தெரிவு செய்யும். இந்தக் குழுவில் நிதியமைச்சகத்தின் செலவீனங்கள் துறை, வெளியுறவு அமைச்சகம், தொழில் அபிவிருத்தி மற்றும் கொள்கைத் துறை, வர்த்தகத் துறை, நிதி சேவை துறை மற்றும் உள்துறையைச் சார்ந்த உயரதிகாரிகள் உறுப்பினர்களாக இருப்பார்கள்.  துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் இந்தக் குழுவில் உறுப்பினராக இருப்பார். திட்டங்களுக்கு இந்தக் குழு ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில், பொருளாதார  விவகாரங்களுக்கான துறை இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கிக்கு, திட்டங்களுக்கு சலுகை நிதியுதவி திட்ட உதவி அளிக்க அறிவுறுத்தி முறையான ஒப்புதல் கடிதத்தை அளிக்கும். 

     தற்போது இந்தத் திட்டத்தை இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கி செயல்படுத்தி வருகிறது. திட்டங்களுக்கு சலுகை நிதியுதவி அளிக்கத் தேவையான நிதியை சந்தை மூலம் இந்த வங்கி திரட்டிக் கொள்கிறது. இந்திய அரசு இந்த திட்டங்களுக்கு உத்தரவாதம் அளிப்பதோடு, இந்திய ஏற்றுமதி வங்கிக்கு இரண்டு சதவீதம் வட்டிக்கு சமமான ஆதரவு   சலுகை நிதியுதவியை வழங்குகிறது.

பின்னணி

      இந்தத் திட்டத்தின் மூலம் இந்திய அரசு இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கிக்கு உத்தரவாதம் அளிப்பதோடு, இரண்டு சதவீதம் வட்டிக்கு சமமான ஆதரவு  சலுகை நிதியுதவியையும் வழங்குகிறது. இதனால், இந்த வங்கி வெளிநாடுகளில் பாதுகாப்பு தொடர்பான கட்டமைப்பு திட்டங்களை பெறும் வெளிநாட்டு அரசு அல்லது வெளிநாட்டின் கட்டுப்பாட்டுடன் செயல்படக்கூடிய நிறுவனம் மற்றும் இந்திய நிறுவனத்திற்கு சலுகை அடிப்படையில் நிதியுதவி அளிக்கிறது.

     இந்தத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் கடனுதவிக்கு சம்பந்தப்பட்ட வெளிநாட்டு அரசும் உத்தரவாதம் அளிக்கிறது.



(Release ID: 1541185) Visitor Counter : 174