மத்திய அமைச்சரவை

இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் இந்திய – கியூபா இடையில் புரிந்துணர்வு உடன்பாட்டுக்கு கேபினட் ஒப்புதல்

Posted On: 18 JUL 2018 5:38PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில், இந்திய பாரம்பரிய மருத்துவ முறை, ஹோமியோபதி மருத்துவம் ஆகியவை குறித்து இந்தியாவுக்கும் கியூபா நாட்டுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கெனவே 2018, ஜூன் 22ம் தேதி கையெழுத்தாகிவிட்டது.

 

இதன் பலன்:

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையில் இந்தியப் பாரம்பரிய. முறைகள், ஹோமியோபதி ஆகியவற்றில் இரு தரப்பு ஒத்துழைப்புக்கு வழி வகுக்கும். பரஸ்பரம் பண்பாடுகளைப் பகிர்ந்து கொண்டு வரும் இரு நாடுகளுக்கும் இது மிகவும் முக்கியமானதாகும்.

 

பின்னணி:

பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, திபெத்திய பாரம்பரிய மருத்துவ முறையான சோவா ரிக்பா, ஹோமியோபதி ஆகியவை நமது நாட்டில் சரியான முறையில் முறைப்படுத்தப்பட்டு மிகச் சிறந்த முறையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.  உலகளாவிய சுகாதார நிலைப்பாட்டில் இந்த அமைப்புகள் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவல்லதாக உள்ளன. இந்த பாரம்பரிய மருத்துவ முறைகளை மத்திய ஆயுஷ் (AYUSH) அமைச்சகம்   உலகளவில் பிரபலப்படுத்த பல்வேறு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக பத்து நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு தரப்பு நாடுகளுக்கும் இடையில் நல்ல புரிதலை ஏற்படுத்துவதுடன் விதிமுறைகள் குறித்த தெளிவையும் வழங்குவதாக அமைந்துள்ளது.  அத்துடன், இந்திய மருந்துப் பொருட்களின் ஏற்றுமதியும் அதிகரிக்கும். சர்வதேச அரங்கில் நல்ல ஒருங்கிணைப்புக்கும் வழியமைக்கும்.

 

*****



(Release ID: 1539188) Visitor Counter : 247